சென்னை: கல்வி என்பது ஒவ்வொரு மாணவருக்கும் விலைமதிக்க முடியாத சொத்தாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் உயர் கல்விக்கான செலவுகள் தற்போது அதிகரித்து வருவதால், அவ்வளவு அதிகக் கட்டணங்களை செலுத்த முடியாத பல மாணவர்கள், கல்விக் கடனை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கல்விக் கடன்களைப் பெறுவதற்கு முன்பு பல்வேறு வங்கிகள் கல்வி கடன்களுக்கு தரும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். குறைந்த வட்டி விகிதம் கொண்ட கடன்களைத் தேர்வு செய்வது சிறப்பானதாக இருக்கும். எனவே இந்தப் பதிவில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் முன்னணி வங்கிகளின் விவரங்களைப் பார்ப்போம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, உள்நாட்டில் படிப்பதற்கான கல்வி கடன்களுக்கு 8.15 சதவீதம் உள்ள முதல் 11.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அதேபோல சர்வதேச நாடுகளில் படிப்பதற்கு 10.15 சதவீதம் முதல் 11.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

பேங்க் ஆஃப் இந்தியா: உள்நாட்டு கல்விக்கு 9.35 சதவீதம் முதல் 11.85 சதவீதம் வரையிலும், சர்வதேச நாடுகளில் படிப்பதற்கு 10.05 சதவீதம் முதல் 11.85 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ICICI பேங்க்: ICICI பேங்க், இந்திய மற்றும் வெளிநாட்டு கல்விக்கான கடன்களுக்குக்கு, வட்டி விகிதங்களை 10.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB): இந்தியாவில் கல்வி கடன்களுக்கு 8.10 சதவீதம் முதல் 12.75 சதவீதம் வரையிலும், வெளிநாடுகளில் படிப்பதற்கு 9.25 சதவீதம் முதல் 12.75 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா: பேங்க் ஆஃப் பரோடா இந்தியாவில் கல்வி கடன்களுக்கு 8.45 சதவீதம் முதல் 13.05 சதவீதம் வரையிலும், சர்வதேச கல்விக்கு 9.70 சதவீதம் முதல் 13.7 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஆக்சிஸ் பேங்க்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்விக்கு 13.7 சதவீதம் முதல் 15.2 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியாவில் படிப்பதற்கு 8.1 சதவீதம் முதல் 12.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அதேபோல சர்வதேச படிப்புகளுக்கு 9.25 சதவீதம் முதல் 9.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.


Click it and Unblock the Notifications