ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?

சென்னை: உங்கள் கனவு வீட்டை வாங்க ஹோம் லோன் வழங்குபவர்களின் குறைந்த வட்டி விகிதங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்தப் பிரத்யேகப் பதிவு உங்களுக்குத்தான். குறைந்த வட்டி விகிதத்தில் ஹோம் லோன் வழங்கும் டாப் 5 வங்கிகளின் விவரங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

இன்றெல்லாம் விலைவாசி கடுமையான உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் சொந்த வீடு வாங்குவது என்பது பலருக்கும் கனவாகவே உள்ளது. அதிலும் சிலர் ஹோம் லோன்கள் பெற்று வீடுகளை வாங்க முயற்சி செய்கின்றனர். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த வகை ஹோம் லோன்களுக்கு அதிக வட்டியை வசூலிப்பதால் சிலர் லோன் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். உங்கள் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு சிறந்த வட்டி விகிதத்தில் ஹோம் லோன் வழங்கும் சில வங்கிகளின் விவரங்களைக் காண்போம்.

ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?

பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகிய ஐந்து பேங்குகளும் வீட்டுக் கடன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைப் பார்ப்போம். இவை 8.4 சதவீதம் முதல் 10.90 சதவீதம் வரை ஹோம் லோன்களுக்கு வட்டியை நிர்ணயித்துள்ளது.

இந்த வங்கிகள் லோன் டு வேல்யூ (எல்டிவி) என்ற விகிதத்தைப் பொறுத்து கடன் பெறுபவர்களின் சொத்து மதிப்பைக் கருத்தில் கொண்டு 90 சதவீதம் வரை கடன் வழங்க அனுமதிக்கிறது. மேலும் இந்த வங்கிகளின் மூலம் 30 ஆண்டுகள் வரை கடன்களுக்கு கால அளவு வழங்கப்படுகின்றன. சில கடன் வழங்கும் பேங்குகள் தேவை என்றால், அதனை 40 ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் செய்கின்றன. மேலும், இந்த வகை ஹோம் லோன்களுக்கு 0.5 % முதல் 2 % வரை ப்ராசஸிங் கட்டணங்கள் இருக்கக்கூடும். கடன் தரும் நிறுவனங்களைப் பொறுத்து இந்த விகிதங்கள் மாறுபடவும் வாய்ப்பு உள்ளது.

பாங்க் ஆஃப் பரோடா ஹோம் லோன்களுக்கு தரும் வட்டி விகிதங்கள்: பேங்க் ஆஃப் பரோடா ஹோம் லோன்களுக்கு 8.4 சதவீதம் முதல் 10.90 சதவீதம் வரை வட்டியை நிர்ணயித்துள்ளது. மேலும் வேறு நிதி நிறுவனங்களிலோ அல்லது பேங்குகளிலோ பெற்ற ஹோம் லோன்களை, இந்த வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியையும் வழங்குகிறது. ப்ரீ அப்ரூவ்ட் லோன் வசதியையும் இந்த பேங்க் ஹோம் லோன் பெறுபவர்களுக்கு வழங்குகிறது.

பஞ்சாப் நேஷனல் பேங்க் ஹோம் லோன்களுக்கு தரும் வட்டி விகிதங்கள்: பஞ்சாப் நேஷனல் பேங்க், ஹோம் லோன்களுக்கு 8.4 சதவீதம் முதல் 10.25 சதவீதம் வரை வட்டியை நிர்ணயித்துள்ளது. 40 வயது வரை உள்ள பாதுகாப்பு பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு ஓவர் டிராப்ட் மற்றும் சிறப்பு ஹோம் லோன் வசதிகளையும் வழங்குகிறது.

எஸ்பிஐ பேங்க் ஹோம் லோன்களுக்கு தரும் வட்டி விகிதங்கள்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தற்போது ஹோம் லோன்களை 8.50 சதவீதம் முதல் 9.85 சதவீத வட்டியில் வழங்கி வருகிறது. இந்த ஹோம் லோன்களுக்கான ப்ராசஸிங் கட்டணமாக ரூ. 5,000 வசூலிக்கப்படுகிறது.

ஹெச்டிஎஃப்சி ஹோம் லோன்களுக்கு தரும் வட்டி விகிதங்கள்: ஹெச்டிஎஃப்சி பேங்க் ஹோம் லோன்களுக்கு 8.7 சதவீதம் முதல் வழங்கி வருகிறது. மேலும் வேறு நிதி நிறுவனங்களிலோ அல்லது பேங்குகளிலோ பெற்ற ஹோம் லோன்களை, இந்த வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

ஐசிஐசிஐ பேங்க் ஹோம் லோன்களுக்கு தரும் வட்டி விகிதங்கள்: ஐசிஐசிஐ பேங்க் ஹோம் லோன்களுக்கு 8.75 சதவீதம் முதல் வழங்கி வருகிறது. மேலும் ப்ரீ அப்ரூவ்ட் இன்ஸ்டன்ட் லோன் பெறுவதற்கான வசதியையும் வழங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+