பொது இடங்களில் ஸ்பீக்கர்போனில் பேசுவது சிலருக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், இது பிறருக்கு எரிச்சலூட்டும் மற்றும் சங்கடப்படுத்தும் ஒரு செயலாகவும் இருக்கலாம். இப்படி ஒரு சூழ்நிலையில்தான் பிரான்சின் நான்டெஸ் ரயில் நிலையத்தில், தனது செல்போனின் ஸ்பீக்கர்போன் அம்சத்தை பயன்படுத்தியதற்காக, ஒரு நபருக்கு €200 (சுமார் ரூ. 17,000) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் பிப்ரவரி 2 ஆம் தேதி நான்டெஸ், பிரான்ஸில் ரயில் நிலையத்தில் நடைபெற்றது."டேவிட்" என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ரயிலுக்காகக் காத்திருக்கும்போது, தனது சகோதரியுடன் ஸ்பீக்கர்போனில் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, பிரான்சின் அரசாங்கத்திற்குச் சொந்தமான ரயில் நிறுவனம் SNCF-இன் அதிகாரி ஒருவர் அவரை அணுகினார். அவர், "உங்கள் செல்போனின் ஸ்பீக்கர்போன் அணைக்காவிட்டால், உங்களுக்கு €150 அபராதம் விதிக்கப்படும்" என்று எச்சரித்தார்.

இதை முதலில் ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட டேவிட், அவர் கூறியதைப் பெரிதாகக் கருதவில்லை. ஆனால், அதிகாரி உண்மையில் கோபத்துடன் அபராதம் விதிக்கத் தொடங்கியபோது,டேவிட் அதிர்ச்சியடைந்தார்.முதலில் விதிக்கப்பட்ட தொகை €150 (சுமார் ரூ. 13,000) ,டேவிட் உடனடியாக செலுத்தவில்லை. எனவே, இதன் காரணமாக, தாமதக் கட்டணத்துடன் சேர்த்து, அபராத தொகை €200 (சுமார் ரூ. 17,000) ஆக உயர்த்தப்பட்டது.
இதற்கிடையில், அபராதம் விதிக்கப்பட்ட டேவிட் கூறுகையில்,அந்த அதிகாரி என் மீது கோபமடைந்ததாக எனக்குத் தோன்றுகிறது. அவர் தனது நோட்புக்கை எடுத்துக்கொண்டு என்னை அபராதம் விதிக்கத் தொடங்கினார் என்றார். மேலும்,தற்போது, டேவிட் ஒரு வழக்கறிஞரின் உதவியுடன் இந்த அபராதத்துக்கு எதிராக வாதிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பெரிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.மக்கள் இரண்டு அணியாகப் பிரிந்துள்ளனர்:
சிலர், "பொது இடங்களில் ஸ்பீக்கர்போன் மூலம் பேசுவதை தடுக்கவேண்டும்" என்று வாதிடுகின்றனர்.மற்றவர்கள், "அதற்காக அபராதம் விதிப்பது மிகைப்படுத்தப்பட்ட நடவடிக்கை" எனக் கூறுகின்றனர்.Reddit-இல் நடந்த ஒரு விவாதத்தில், ஒரு பயனர் "பொது இடங்களில் ஹெட்ஃபோன்களை பயன்படுத்தாமல் வீடியோக்களை பார்க்கிறதும், அழைப்புகளைச் செய்வதும் ஒரு பழக்கமாகி வருகிறது" என்று குறிப்பிட்டார்.
மற்றொரு கருத்து, அருகில் உள்ள ஒருவர் தனது தனிப்பட்ட உரையாடல் மற்றவர்களுக்குக் கேட்கக்கூடியதாக இருப்பதை உணரும்போது, அது சங்கடமான சூழ்நிலையாக மாறலாம்" என்று குறிப்பிடுகிறது.
பிரான்சில், பொது இடங்களில் ஸ்பீக்கர்போனில் பேசுவதைத் தடுக்க எதுவும் நேரடி சட்டமாக இல்லை. இருப்பினும், பகிரப்பட்ட இடங்களில் தேவையில்லாத சத்தங்களை கட்டுப்படுத்த சில ஒலி கட்டுப்பாட்டு விதிமுறைகள் உள்ளன.இது போன்ற விதிகள், பொதுவாக வழித்தட போக்குவரத்து அமைப்புகளில் இருந்தாலும், கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது அபூர்வம்.இந்த சம்பவம் குறித்து எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்குமா? என்று பல கேள்விகளை எழுப்புகிறது.
டேவிட் மீது விதிக்கப்பட்ட €200 அபராதம், பொது இடங்களில் பிறரை மதிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் முன்வைக்கிறது.இவ்வாறான சம்பவங்கள், சமூக நடத்தை எவ்வாறு மாறிவருகிறது என்பதையும், நவீன தொழில்நுட்ப உபயோகத்தில் எவ்வளவு சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதையும் சிந்திக்கத் தூண்டுகிறது.ஆகையால், பொது இடங்களில் பிறரை மதித்து நடப்பது முக்கியம். மற்றவர்களுக்கு இடையூறாக இருக்காமல், மொபைல் பயன்படுத்தும் முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெறிந்துக்கொள்ளளாம்.


Click it and Unblock the Notifications