இந்தியாவில் ஆண்டுதோறும் மளிகை பொருட்கள், மருந்துகள், வீட்டு வாடகை என அனைத்திற்குமான செலவுகளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.
இந்தியாவில் அதிகபட்ச வரி விதிக்கப்படுகிறது ஆனால் அதற்கேற்ற வசதிகளை அரசு ஏற்படுத்தி தருவதில்லை என பல்வேறு நிதி சார்ந்த இன்ஃப்ளூயன்சர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். Wisdom Hatch என்ற நிறுவனத்தின் தலைவரும் நிதி ஆலோசகருமான அக்சத் ஸ்ரீவாஸ்தவா இந்தியாவில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதாக கூறுகிறார். எதிர்காலத்தில் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏழையாகத்தான் இருப்போம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கும் அவர் பெங்களூருவில் 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வாங்குவதற்கு 500 ரூபாய் செலவிடப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் விலை 800 ரூபாயாக உயர்ந்து இருக்கிறது, இது மட்டுமல்ல பல்வேறு அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலை நாம் எதிர்பார்க்காத அளவு உயர்ந்து இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
மருத்துவ பணம் ஈக்கம் என்பது 14 சதவீதமாக இருக்கிறது குழந்தைகளுக்கான கல்விக்கான பணவீக்கம் 15 லிருந்து 20% ஆக இருக்கிறது உங்களை மொபைல் பில் கூட இந்த ஆண்டு மேலும் 20% உயரப் போகிறது என குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது கடந்த ஆண்டு மருத்துவத்திற்காக நாம் செய்த செலவை விட இந்த ஆண்டு 14% கூடுதலாக செலவு செய்ய வேண்டும் , குழந்தைகள் கல்விக்காக கடந்த ஆண்டு செய்த செலவை விடஇந்த ஆண்டு 15 லிருந்து 20% வரை கூடுதலாக செலவிட வேண்டி இருக்கும் என அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம் ஊழல் என தெரிவித்திருக்கிறார் .ஒரு நிமிடம் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் தண்ணீருக்காக முதலில் நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும், நீங்கள் அரசுக்கு பல வழிகளில் வரிகளை செலுத்துகிறீர்கள் இப்படிப்பட்ட உங்களுடைய குழந்தைகளுக்கு அரசு இலவசமாகவே தரமான கல்வியை தர வேண்டும் ஆனால் இந்தியாவில் அப்படிப்பட்ட நிலைமை இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் செலுத்தும் பணம் அனைத்தும் அரசியல் ரீதியான ஊழலுக்கே செல்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் இந்தியா எத்தனை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்தாலும் நாம் தொடர்ந்து ஏழையாகத்தான் இருப்போம் உங்களுடைய சம்பளம் உயரும் ஆனால் அதைவிட அத்தியாவசிய சேவைகளுக்காக நீங்கள் செய்யும் செலவு பல மடங்கு உயரும் என சுட்டிக்காட்டி உள்ளார்.
நம்முடைய வருமானத்தில் பெரும்பகுதியை அத்தியாவசிய தேவைகளுக்கே செலவிடும் நிலை தான் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications