ஈரானில் ஒவ்வொரு நாளும் போர் தீவிரம் அடைந்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் என்பதிலிருந்து தாண்டி ஈரான் போரின் முகம் தற்போது மாறி வருகிறது. இதற்கு காரணம் ஈரான் அண்டை நாடுகளின் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
ஈரான் போர் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது. மூன்று வார காலமாக இந்த பிராந்தியத்திலிருந்து சரக்கு கப்பல்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றன. இது கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வித்திட்டு பல்வேறு நாடுகளிலும் எல்பிஜி மற்றும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. இந்த போர் நீடிக்கும் பட்சத்தில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் உயரும். எனவே பல்வேறு நாடுகளும் கோரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக குரல் கொடுத்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் இந்தியா , ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என சர்வதேச அளவில் குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. பின்லாந்து நாட்டு அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், ஈரான் போரில் இந்தியா மத்தியஸம் செய்ய வேண்டும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வர வேண்டும் என யோசனை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கும் அலெக்சாண்டர் ஸ்டப், தற்போது போர் நிறுத்தம் தேவை , இந்தியா நினைத்தால் அதனை செய்ய முடியும் என கூறியுள்ளார். இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்காவுடனும் நல்ல உறவினை பேணுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் சிறந்த நட்புறவை கொண்டவராக இருக்கிறார். இந்தியா ஈரானுடனும் சிறந்த நட்பு கொண்டிருந்தது.

அண்மையில் கூட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வருவதற்கு அனுமதி பெற்றார். அந்த வகையில் இந்தியா நினைத்தால் அமெரிக்கா , இஸ்ரேல் மற்றும் ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிராந்தியத்தில் ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை மற்றும் அமைதியை நிலைநாட்ட முடியும் என சர்வதேச அளவிலான குரல்கள் எழ தொடங்கி இருக்கின்றன.
அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ச்சியாக ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். ஹார்முஸ் ஜலசந்தி வழியே இந்திய கப்பல்களை அனுமதிப்பது, ஈரானில் இருக்கக்கூடிய இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் அவருடைய பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
முன்னதாக பிரதமர் மோடியும் ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டிருக்கிறார். அதேபோல வர்த்தக போக்குவரத்துக்கு எந்த ஒரு தடையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பது குறித்து மோடி அப்போது வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்த சூழலில்தான் இந்தியா தலையிட்டு தற்காலிக போர் நிறுத்தத்தையும் மேற்காசிய பிராந்தியத்தில் அமைதியும் நிலைநாட்ட முடியும் என பின்லாந்து குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.
அந்த வகையில் சர்வதேச விவகாரங்களில் மத்தியஸ்தம் செய்யக்கூடிய அந்தஸ்துக்கு தற்போது இந்தியா முன்னேறி இருக்கிறது. ஒருவேளை பின்லாந்து யோசனை ஏற்று இந்தியா மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தத்தை கொண்டு வந்தால் உலகமே இந்தியாவுக்கு நன்றி கூறும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?



Click it and Unblock the Notifications