சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆன்லைன் மதுபான விற்பனை மற்றும் டெலிவரி நிறுவனமான ஹிப்பார்-ஐ (HipBar) கிரெடிட் கார்டு பேமெண்ட் சேவையில் முன்னோடியாக இருக்கும் கிரெட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட் துறையில் இருக்கும் கிரெட் நிறுவனம் எதற்காக மதுபான நிறுவனத்தை வாங்க வேண்டும், இப்படி ஹிப்பார் நிறுவனத்தில் என்ன இருக்கு..?? இருக்கு ரொம்ப பெரிய விஷயம் உள்ளது.
பின்டெக் யூனிகார்ன்
இந்தியாவின் முன்னணி பின்டெக் யூனிகார்ன் நிறுவனமாக இருக்கும் CRED தற்போது கிரெடிட் கார்டு பேமெண்ட் சேவையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினாலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் Cred நிறுவன தலைவர் குணால் ஷா.
ஹிப்பார்
இதற்காகச் சென்னையைச் சேர்ந்த ஹிப்பார் வைத்திருக்கும் ப்ரீபெய்டு பேமெண்ட் இன்ஸ்ரூமென்ட் லைசென்ஸ் வைத்து குணால் ஷா தலைமையிலான CRED நிறுவனம் புதிதாக வேலெட் பேமெண்ட் சேவை வர்த்தகத்தைத் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
100 சதவீத பங்குகள் கைப்பற்றல்
எந்த விலைக்கு வாங்கப்பட்டது என்பது குறித்துக் கிரெட் மற்றும் ஹிப்பார் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், ஹிப்பார் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் CRED நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரசன்னா நட்ராஜன்
ஹிப்பார் மற்றும் CRED கைப்பற்றியுள்ள நிலையில் எப்படி இணைக்கப்படுகிறது என்பது தெரியவில்லை என்றாலும் ஹிப்பார் நிறுவனத்தின் தலைவரான பிரசன்னா நட்ராஜன் உடன் அனைத்து ஊழியர்களும் CRED நிறுவனத்தில் சேர உள்ளனர். இதன் மூலம் ஹிப்பார் நிறுவனத்தின் பணிநீக்கம் இல்லை.
மதுபானம் விற்பனை இல்லை
இதேபோல் CRED நிறுவனம் மதுபானம் விற்பனை செய்ய எந்தத் திட்டமும் இல்லை என இந்த நிறுவன கைப்பற்றல் குறித்த அறிந்த நபர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கைப்பற்றலுக்குப் பின் ஹிப்பார் மதுபான விற்பனையில் இருந்து மொத்தமாக வெளியேற உள்ளது.


Click it and Unblock the Notifications