வெறும் 12 ரூபா சம்பளம் வாங்கும் Slice நிறுவனர் ராஜன் பஜாஜ்..!!

பெங்களூரு: இந்தியாவில் பொதுவாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மதிப்பீட்டை எட்டும் நிறுவனங்கள் யூனிகார்ன் நிறுவனங்கள் என்ற அந்தஸ்தை பெறுகின்றன.

அந்த வகையில் தற்போது இந்தியாவின் யூனிகார்ன் நிறுவனங்களின் நிறுவனர்கள் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறார்கள் என்பதற்கான பட்டியலை பிரைவேட் சர்க்கிள் ரிசர்ச் (Private Circle research) என்ற தனியார் தளம் வெளியிட்டுள்ளது.

 வெறும் 12 ரூபா சம்பளம் வாங்கும் Slice நிறுவனர் ராஜன் பஜாஜ்..!!


பிரபல ஃபின்டெக் யூனிகார்ன் நிறுவனமான ஸ்லைஸ்-இன்(Slice) நிறுவனர் ராஜன் பஜாஜ் 2023 ஆம் நிதியாண்டில் வெறும் 12 ரூபாயை ஊதியமாக பெற்று இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் ஸ்லைஸ் நிறுவனம் 847 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

இதற்கு அதற்கு முந்தைய ஆண்டை விட பல மடங்கு அதிகம். இருப்பினும் இதன் நிறுவனர் தான் 12 ரூபாயை மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதே காலக் கட்டத்தில் ஃபர்ஸ்ட்கிரை(firstcry) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுபம் மகேஸ்வரி கிட்டத்தட்ட 200 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறார். ஆனால் 2024 ஆம் நிதியாண்டி சுபம் மகேஸ்வரியின் ஊதியம் 49% குறைந்துவிட்டது.

யூனிகார்ன் நிறுவனங்களில் ஆண் நிறுவனர்களுக்கும் பெண் நிறுவனர்களுக்கும் இடையே மிகப்பெரிய ஊதிய இடைவெளி இருக்கிறதாம். பெண் நிறுவனர்கள் பெறும் ஊதியம் ஆண் நிறுவனர்களை விட 44% குறைவாக இருக்கிறது என்ற தகவலும் இந்த ஆய்வறிக்கையில் வெளிவந்துள்ளது.

ஒரு யூனிகார்ன் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒரு ஆண் 1.8 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கிறார் என்றால் அதே காலகட்டத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண் ரூ.1 கோடியை தான் பெறுகிறாராம்.

இந்தியாவில் உள்ள 114 யூனிகார்ன் நிறுவனங்களையும் அவற்றின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் ஊதியத்தையும் ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் மீடியா மற்றும் என்டேர்டைன்மென்ட் பிரிவை சேர்ந்த யூனிகார்ன் நிறுவனங்களின் நிறுவனர்கள் தான் அதிகபட்சமாக ரூ.3.50 கோடி வரை வருமானம் பெற்றுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர்கள் ரூ.2 கோடி என்று அளவிலும், கல்வி சார்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் ரூ.1.6 கோடி ரூபாயையும் வருமானமாக பெற்றுள்ளனர்.

இந்தியாவில் யூனிகார்ன் நிறுவனங்களில் பாலின வேறுபாடு இருக்கிறது என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் உள்ள 57 யூனிகார்ன் நிறுவனங்களின் வாரிய உறுப்பினர்களில் ஒரு பெண் கூட இல்லை என்ற தகவல் வெளியானது.

இந்தியாவில் புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய ஆறு நகரங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான நிறுவனர்கள் வசிக்கிறார்களாம்.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+