டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் ச பேசுகையில், ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் தற்போது செய்யப்பட்டு உள்ள விரிவாக்க பணிகள் மூலம் 20000 பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து இன்று மாலை ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ்-ன் பேஸ் 1, பேஸ் 2 திட்டம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டால் சுமார் 80000 பேர் பணியாற்றும் தொழிற்சாலையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ்-ன் ஓசூர் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அனைவருக்கும் தெரியும், வார இறுதி நாட்களில் தயாரிப்பு பணிகள் மொத்தமாக நிறுத்தப்பட்ட நிலையில் திங்கட்கிழமையும் உற்பத்தி பணிகள் துவங்கப்படவில்லை.

திங்கள்கிழமை மாலையில் இத்தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்து ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் இருக்கும் கெமிக்கல் குடோனில் காலை 6 மாணிக்கு ஏற்பட்டு உள்ளது.
தீயை அணைக்க 7க்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகள் வந்தது. ஓசூரைக் குட்டி ஜாம்ஜெட்பூர் ஆக மாற்றும் முயற்சியில் டாடா குழுமம் இருந்த நிலையில், இந்தத் தீ விபத்து டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையின் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை நிர்வாகம் விபத்து எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதை ஆய்வு செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கையை மிகவும் கண்டிப்பான முறையில் எடுக்க உள்ளது. இந்த தீவிபத்தில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்பது முக்கியமான விஷயம்.
இந்த தீவிபத்து கெமிக்கல் குடோனில் ஏற்பட்ட காரணத்தால், விபத்தின் போது தீப்பிடித்த கட்டிடங்கள், கட்டமைப்புகள் அகற்றப்படும் போது மீண்டும் தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், தீயணைப்பு வாகனங்களைத் தொழிற்சாலையிலேயே நிறுத்தி வைத்துள்ளதாகக் கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி எம்.வேலு தெரிவித்தார்.
இதேவேளையில் திங்கள்கிழமை காலையில் இருந்து மீட்பு குழுக்கள் இடிபாடுகளை அகற்றி வருகின்றன, இதனால் எப்போது ஓசூர் ஆலையில் உற்பத்தி பணிகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications