ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் பணக்காரர் பட்டியலை வெளியிடும் என்பதும் அந்த பட்டியலில் பெரும்பாலும் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளின் கோடீஸ்வரர்கள் மட்டுமே இருந்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் முதல் முறையாக நேபாள நாட்டின் கோடீஸ்வரர் ஒருவர் போர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் இணைந்துள்ளார்.
மேலும் அவர் நேபாள நாட்டில் இருந்து போர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்ற முதல் மற்றும் ஒரே பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ப்ஸ் பட்டியல்
ஒவ்வொரு ஆண்டும், ஃபோர்ப்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகின் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுகிறது. அதில் பெரும்பாலும் அமெரிக்கா, சீனா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்கள் மட்டும் உள்ளனர்.
நேபாள கோடீஸ்வரர்
இந்த நிலையில் உங்களில் பலர் கேள்விப்பட்டிராத, பெரிதாக அறியப்படாத கோடீஸ்வரர், ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது தெரியுமா? அவர் தான் நேபாளத்தின் முதல் மற்றும் ஒரே கோடீஸ்வரர் பினோத் சௌத்ரி ஆவார்.
கோடீஸ்வரர் பினோத் சௌத்ரி
நேபாளத்தின் முதல் மற்றும் ஒரே கோடீஸ்வரான பினோத் சௌத்ரி முதன்முதலில் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 2013 ஆம் ஆண்டு 1342 வது இடத்தில் இருந்தார். தற்போது, தொழிலதிபர் பினோத் சௌத்ரி 1929வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஆனாலும் இன்னும் அவர் $1.5 பில்லியன் நிகர சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஒரு பில்லியனராக இடம்பெற்றுள்ளார்.
அறக்கட்டளை
ஃபோர்ப்ஸ் ஆசியாவின் செப்டம்பர் இதழின் அட்டைப்படத்தில் அவர் தலைப்பு செய்தியில் இடம்பெற்றார். நேபாளம் கடந்த 2015ஆம் ஆண்டு நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோது, வீட்டை இழந்தவர்களுக்கு சுமார் 10,000 வீடுகளை கட்டித்தர அவர் ஒப்புக்கொண்டார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை எடுத்ததால் அவர் ஃபோர்ப்ஸ் ஆசியாவின் செப்டம்பர் இதழின் அட்டைப்படத்தில் தலைப்பு செய்தியில் இடம்பெற்றார்.
சமூக சேவை
நேபாளம் நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி தந்ததோடு மட்டுமின்றி நிலநடுக்கத்தால் சேதமடைந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் மீட்டெடுக்க அவர் தனது செளத்ரி அறக்கட்டளை மூலம் $2.5 மில்லியன் நிதியுதவி செய்து சமூக சேவையிலும் ஈடுபட்டார்.
தொழிற்சாலைகள்
67 வயதான பினோத் சௌத்ரி நேபாளத்தின் நபில் வங்கி மற்றும் பிரபலமான வைவாய் நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். இந்தியா, செர்பியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் அவரது தொழிற்சாலைகள் உள்ளனர். மேலும் எகிப்தில் தற்போது ஒரு புதிய தொழிற்சாலையை அவர் கட்டி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து நேபாளம்
கோடீஸ்வரர் பினோத் குமார் செளத்ரி நேபாளத்தின் காத்மாண்டுவில் ஒரு மார்வாரி குடும்பத்தில் பிறந்தார். அவரது தாத்தா, பூரமல் தாஸ் சௌத்ரி, ஒரு தொழில்முனைவோர் ஆவார். அவர் ஜவுளி தொழிலை தொடங்குவதற்காக 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து நேபாளத்திற்கு குடிபெயர்ந்தார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications