அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்கள் பெரும் தடுமாற்றத்திலும், சிக்கலிலும் மாட்டிககொண்டு உள்ளது என்றால் மிகையில்லை. சீனாவில் எப்படி ஏஐ, செமிகண்டக்டர் துறை பங்குகளை டிராகிங் செய்யும் STAR 50 குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 40 சதவீதம் குறைந்து இதில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு 480 பில்லியன் டாலர் குறைந்துள்ளதோ அதேபோல் தற்போது அமெரிக்காவில் நிலைமை மாறியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி டெக் மற்றும் ஏஐ துறையை சார்ந்த் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2026ஆம் ஆண்டில் பதிவான அதிகப்படியான அளவில் இருந்து ஆப்லோவின் என்ற நிறுவனத்தின் பங்கு மதிப்பு 65 சதவீதம் சரிந்துள்ளது.

இப்படி கோர்வீவ் 57 சதவீதமும், காயின்பேஸ் 56 சதவீதமும், வெஸ்டர்ன் டிஜிட்டல் 52 சதவீதமும், ஆரக்கிள் 50 சதவீதமும், ஆர்ம் ஹோல்டிங்ஸ் 49 சதவீதமும், சர்க்கிள் 44 சதவீதமும், சான்டிஸ்க் 42 சதவீதமும், ராபின்ஹூட் 40 சதவீதமும், சீகேட் 39 சதவீதமும், சர்வீஸ்நவ் 37 சதவீதமும், சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் 35 சதவீதமும், இன்டெல் 35 சதவீதமும், அடோப் 34 சதவீதமும், ப்ராட்காம் 31 சதவீதமும், மார்வெல் டெக்னாலஜி 30 சதவீதமும், ஆல்பாபெட் 28 சதவீதமும், ஐபிஎம் 25 சதவீதமும், மைக்ரான் 24 சதவீதமும் மற்றும் மெட்டா 22 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
உண்மையில் அமெரிக்க பங்குச்சந்தையில் டெக் நிறுவன பங்குகள் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் பெரும் ஆதிக்கம் செய்யும் S&P 500 குறியீட்டு வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகி வரும் இதேவேளையில் டெக் பங்குகள் பெரும் சரிவை சந்தித்து Bear Market-ல் இயங்கும் ஒரு ஸ்டெல்த் மார்க்கெட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்டெல்த் மார்க்கெட்டில் என்றால் ஒரு குறியீட்டில் டாப் 10 அல்லது 20 பங்குகளின் அதிரடியான உயர்வின் மூலம் ஒட்டுமொத்த குறியீடும் உயர்வுடன் இருப்பாத தெரியும், முதலீட்டு சந்தையும் சந்தை உயர்வுடன் இருப்பதாக நம்பும்.
உதாரணமாக S&P 500 குறியீட்டில் பெரும் பகுதி பங்குகள் அதாவது 50 -60 சதவீத பங்குகள் 20 சதவீதம் அல்லது அதற்கு மேல் சரிவில் உள்ளது. ஆனாலும் S&P 500 குறியீட்டு வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதை தான் Stealth Bear Market என அழைக்கப்படுகிறது.
நேற்றைய வர்த்தகத்தில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்-ன் காலாண்டு முடிவுகளில் குறைவான வருவாய் வெளியிட்டத்தை தொடர்ந்து கூகுள் 8 சதவீதம் வரையில் ப்ரீமார்கெட்டில் குறைந்துள்ளது.
இதேபோல் மைக்ரோசாப்ட் எதிர்பார்ப்பை காட்டிலும் அதிக காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளதன் வாயிலாக 5 சதவீதம் உயர்வுடன் உள்ளது.
ஆரக்கிள் நிறுவனம் தனது ஃப்ரீ கேஷ்ப்லோ 2029ல் 30 பில்லியன் டாலரை தொடரும் என கணித்துள்ளது மூலம் அதன் பங்குகள் 12 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் 2030ஆம் நிதியாண்டில் ஆரக்கிள் நிறுவனம் சுமார் 225 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை எதிர்பார்க்கிறது.
இத்தகைய கலவையான சூழ்நிலையிலும் S&P 500 குறியீடு வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது என்பதை மிகவும் எச்சரிக்கையாக முதலீட்டு வல்லுனர்கள் பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications