டெல்லி: மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக டெல்லி மாறிவிட்டது, அடுத்ததாக பெங்களூரும் மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறப்போகிறது. அடுத்து எந்த நகரம்? என எக்ஸ் தளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு மிகத் தீவிரமான விவாதங்களை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றை தேடி மக்கள் மெட்ரோ நகரங்களை நோக்கி இடம்பெயர்கின்றனர். இதனால் இந்தியாவில் டெல்லி, மும்பை,சென்னை,பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது.

இதற்கு ஏற்ப குடியிருப்புகள் அதிகரிப்பு, வாகனங்கள் அதிகரிப்பு, வாகன நெரிசல் என பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. வெயில் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு. மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்குதல் என நகரங்களில் பிரச்னைகளுக்கு குறைவில்லை.
ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரான அஞ்சலி லால் எக்ஸ் தள பக்கத்தில் நகரங்கள் குறித்து பதிவிட்டுள்ள ஒரு பதிவு தற்போது அனல் பறக்கும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சலி லால் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் "அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெங்களூரு மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிடும், தற்போது டெல்லி இருப்பதைப் போலவே" என பதிவிட்டு இருந்தார். இதனை அடுத்து "நண்பர்களே அடுத்து நாம் எந்த நகரத்தை இப்படி மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாற்றப் போகிறோம்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது இந்த பதிவு எக்ஸ் தள பக்கத்தில் 2.8 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. 2000க்கும் அதிகமானவர்கள் இதனை லைக் செய்துள்ளனர். பலரும் தங்களது பின்னூட்டங்களையும் பகிர்ந்துள்ளனர்.
சிலர் அஞ்சலி லாலுக்கு ஆதரவாகவும் சிலர் அஞ்சலி லாலின் கருத்துக்கு எதிராகவும் பதிவு செய்துள்ளனர். ஒரு பதிவர் காற்று மாசு தவிர டெல்லியில் வேறு எந்த பிரச்சனை இருக்கிறது, டெல்லி மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமென எப்படி நீங்கள் கூறலாம் என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அஞ்சலி லால் குளிர் காலங்களில் மூச்சு விட முடியாது, தண்ணீர் பிரச்சனை இப்படி பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளார் .
மற்றொரு நபரோ இந்த பட்டியலில் ஹைதராபாத் ஏற்கனவே சேர்ந்துவிட்டது கூடிய விரைவில் புனேவும் சேர்ந்து விடும் எனக் கூறியுள்ளார். மற்றொரு பயனாளர் ஏற்கனவே நீங்கள் மும்பை போன்ற நகரங்களில் வாழ்ந்திருந்தால் தற்போது நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் எல்லாம் ஒரு பிரச்சினையாகவே உங்களுக்கு தெரிந்திருக்காது எனக் கூறியுள்ளார்.
ஒரு பயனாளர் கேரள மாநிலத்தின் கொச்சி நகரம் தற்போது நன்றாக வளர்ந்து வளரும் நகரமாக இருக்கிறது. மெட்ரோ இணைப்பு, மால்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ,சர்வதேச விமான நிலையம் என மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் கொச்சிக் இருக்கிறது என கூறியுள்ளார்.
மற்றொரு நபர் டெல்லியில் நல்ல உள்கட்டமைப்பு இருக்கிறது அங்கே பெங்களூருவை போல அங்கே தண்ணீர் பிரச்சினை கிடையாது காற்று மாசு மட்டுமே பிரச்சனை என கூறியுள்ளார். இப்படி பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்..
Story written by: Devika


Click it and Unblock the Notifications