ஜிலுஜிலு காஷ்மீருக்கு முதன் முதலாக நேரடி ரயில் சேவை.. வெறும் 3 மணிநேரத்தில் ஸ்ரீநகர் டூ ஜம்மு..!

எம்ஜிஆர், சிவாஜி காலம் முதல் அஜித், விஜய் வரை காஷ்மீர் பனிச்சரிவில் பாடும் டூயட் பாடல்களில் மட்டுமே காஷ்மீரின் ஜில்லென்ற குளிரை திரையில் பார்த்து அனுபவிக்கும் பலருக்கு காஷ்மீர் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு காஷ்மீர் வரையில் செல்ல ரயில் சேவை இருந்தாலும் பல இணைப்பு ரயில்களை நாட வேண்டும்.

ஆனால் முதன்முறையாக காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு நேரடியாக இணைக்கும் ரயில் சேவையை இந்திய ரயில்வே விரைவில் தொடங்கவிருக்கும் சந்தோஷமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜிலுஜிலு காஷ்மீருக்கு முதன் முதலாக நேரடி ரயில் சேவை.. வெறும் 3 மணிநேரத்தில் ஸ்ரீநகர் டூ ஜம்மு..!

இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏகக் குஷியாகி உள்ளனர். டால் ஏரியில் சுகமான வீட்டுப்படகுகளில் தேனிலவையும், குடும்பத்துடன் இன்பச்சுற்றுலாவையும் எளிதாக அனுபவிக்கலாம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இப்படியொரு அறிவிப்பு பலரையும் ஈர்த்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையிலான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில்வே லைன் (USBRL) அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. விரைவில் இந்த வழித்தடத்தில் பல ரயில்கள் மக்களை ஏற்றிச்சென்று மகிழ்விக்கும்.

ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு பகுதியிலிருந்து எழில்கொஞ்சும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கடந்த டிசம்பர் 5 ஆம் தேதியன்று பனிஹால் நிலையத்திலிருந்து ஜம்முவின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள காரி ரயில்வே நிலையத்துக்கு வடக்கு ரயில்வே, சோதனை முறையில் ஒரு மின்சார ரயிலை இயக்கிப் பார்த்தது.

எத்தகைய காலநிலையிலும் இந்த நேரடி ரயில் சேவை தடையின்றி இயங்கும். அதுமட்டுமல்லாமல் தற்போது ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு செல்ல ஆறு மணிநேரம் ஆகிறது. ஆனால் புதிய சேவையின்படி இது 3-4 மணிநேரம் மட்டுமே ஆகும். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

இந்தப் புதிய USBRL தடத்தை அமைப்பதற்கு கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட்டும், இர்கான் இண்டர்நேஷனல் லிமிடெட்டும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இத்திட்டச்செலவு ரூ.37,012.26 கோடியாகும்.

கொங்கன் ரயில்வேயின் மூத்த பொறியாளர் அளித்த தகவல்படி இந்த ரயில் சேவை அடுத்த 3-4 மாதங்களில் தொடங்கும். இந்த ரயில் பாதையில் டி1, டி14 சுரங்கப் பாதைகள் மற்றும் பாலம் 60இன் பணிகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பல சிரமங்கள் இருந்தாலும் பொறியாளர்களும் ஊழியர்களும் பணியை விரைவில் முடிப்பதற்காக பணியாற்றி வருகின்றனர்.

எப்படி ஆயினும் ஜம்முவுக்கும் ஸ்ரீநகருக்குமான இந்த புதிய சேவை முழுமையாகச் செயல்படுவதற்கு அடுத்த ஆண்டின் தொடக்கம் வரை ஆகும் என்றார். உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில்வே லைன் திட்டம் ஒரு தேசியத் திட்டமாக 2002-03 காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதன் மொத்த தூரம் 272 கி.மீட்டராகும்.

முதற்கட்டமாக 118 கி.மீட்டர் நீளமுள்ள காசிகுண்ட்- பாரமுல்லா பகுதி அக்டோபர் 2009இல் செயல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 18 கி.மீட்டர் நீளமுள்ள பனிஹால்-காசிகுண்ட் விரிவாக்கம் 2013 ஜூனில் செயல்படுத்தப்பட்டது.

25 கி.மீட்டர் தூரமுள்ள உதம்பூர்-காத்ரா பகுதி 2014இல் செயல்படுத்தப்பட்டது. தற்போது 111 கி.மீட்டர் தூரமுள்ள காத்ரா-பனிஹால் பகுதி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் உயரமான குன்றுகளும் பள்ளங்களும் இருப்பதால் கட்டுமானத்துக்கு சவாலாக உள்ளது.

செனாப் நதியின் மீதான உலகின் உயர்ந்த ரயில் பாலம் தரையில் இருந்து 35 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஐபில் கோபுரத்தைக் காட்டிலும் உயரமாகும். அத்துடன் இந்தியாவின் முதல் கேபிள் இணைப்புடனான ஆஞ்சி காட் பாலம் கட்டியமைக்கப்பட்டுவிட்டது. இந்தப் பாலங்கள் காத்ரா-பனிஹால் வழித்தடத்தில் அமைந்துள்ளன என்றார்.

இந்த இரு வரலாற்று சிறப்புமிக்க பாலங்கள் தவிர, இந்தப் புதிய ரயில் பாதையில் மிகக் கடினமான இமயமலையைக் குடைந்து பிரமாண்டமான டி-49 சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 12.7 கி.மீட்டர் நீளமுள்ள இதுதான் இந்திய ரயில்வேயால் கட்டப்பட்ட மிக நீண்ட சுரங்க ரயில்பாதையாகும். பனிஹால்-காசிகுண்ட் பகுதியில் அமைந்துள்ள 11.2 கி.மீட்டர் நீளமுள்ள ரயில்வே சுரங்கப்பாதையை இது மிஞ்சிவிட்டது.

இந்தப் பாதையில் அமைந்துள்ள அனைத்து சுரங்கப் பாதைகளும் புதிய ஆஸ்திரியன் டன்னலிங்க் முறையில் அமைக்கப்பட்டவை. 186 கி.மீட்டர் நீளத்துக்கு மொத்தம் 38 பிரதான சுரங்கப்பாதையும் 8 அவசரப்பாதை சுரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 931 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த நீளம் 13 கி.மீட்டர்.

இதில் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இந்தப் புதிய ரயில் தடத்தில் நாட்டின் அதிவேகமான வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கான திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. சுற்றுலாவுக்கு மட்டுமல்லாமல் அவசரகால நேரத்தில் ராணுவத்தினர் விரைவாக காஷ்மீருக்குள் செல்வதற்கு இந்த ரயில் திட்டம் மிகவும் அத்தியாவசியமானது என்று பாதுகாப்புத்துறை தெரிவிக்கிறது.

இந்த ரயில் பாதைக்காக இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளதால் காஷ்மீர் பகுதியின் 73 கிராமங்களும் 1,47,000 மக்களை பிற பகுதிகளுக்கு இணைக்கும் சாலை வசதியும் வந்துள்ளது.

முக்கியமாக ஜம்மு-ஸ்ரீநகர் போக்குவரத்து கடுமையான பருவகாலங்களில் ஏராளமான விபத்துகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது. இது மக்களுக்கு ஆபத்தான விஷயம் என்பது மட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்துக்கும் ஊறுவிளைவிப்பதாக இருந்து வருகிறது. ஆனால் புதிய ரயில்பாதை திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்னைகள் முற்றிலும் களையப்படும் என்று ரயில்வே மற்றும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+