இந்தியாவின் மிகப் பிரபலமான பாட்காஸ்ட் என்றால் Zerodha-வின் இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் 'WTF is?' தான், இந்த நிகழ்ச்சியில் பல முக்கியமான நபர்களை இண்டர்வியூவ் செய்யப்பட்டு உள்ளது. உதராணமாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா, பிரதமர் மோடி என பல முக்கிய புள்ளிகள் கலந்துக்கொண்டு உள்ளனர். ஆனால் தற்போது அடுத்தக்கட்டமாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாளர் எலான் மஸ்க் இணைகிறார் என்பது போன்ற ஒரு வீடியோவை நிகில் காமத் டிவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
எலான் மஸ்க்குடன் உரையாடுவது போன்ற வீடியோ டீசரை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நிகில் காமத், இந்த 39 வினாடி கருப்பு-வெள்ளை வீடியோவில் இருவரும் காபி குடித்துக்கொண்டு சிரிப்பது போன்ற காட்சிகள் உள்ளது. இதை பார்த்து இணையவாசிகள் ஆடிப்போய் உள்ளனர். ஆனால் இது உண்மையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.?

நிகில் காமத்:
நிகில் காமத், Zerodha-வின் இணை நிறுவனர், இந்தியாவின் சுயமாக உருவான இளம் பில்லியனேர்களில் மிகவும் முக்கியமானவர் ஆவார். 2025-ல் Forbes பட்டியலில் 1462-வது பில்லியனராக இடம்பெற்றுள்ளார். அவரது சொத்துமதிப்பு 2.5 பில்லியன் டாலர்கள் என்று போர்ப்ஸ் கணித்துள்ளது. 2024-ல் இவருடைய சொத்து மதிப்பு 3.1 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிகில் காமத் Zerodha-வின் வெற்றியுடன், True Beacon என்ற முதலீட்டு மேலாண்மை நிறுவனம், Gruhas என்ற ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனம், Rainmatter ஃபின்டெக் முதலீட்டு நிதி போன்ற நிறுவனங்களும் அவரது சொத்தின் முக்கிய பகுதியாக உள்ளது.
10-ம் வகுப்பை மட்டுமே படித்த காமத், கால்சென்டர் வேலையிலிருந்து தொடங்கி, சகோதரர் நிதின் காமதுடன் Zerodha-வை 2010-ல் தொடங்கி, இன்று 7.26 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டாக் புரோக்கரேஜ் நிறுவனமாக உருவாக்கியுள்ளார்.
Zerodha-வின் நிதி வலிமை
Zerodha சமீபத்தில் முக்கிய பேசுப்பொருளானது, இந்நிறுவனத்தின் நிதி நிலைமை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 2025 நிதியாண்டின் இறுதியில் இந்நிறுவனத்தின் கேஷ் ரிசர்வ் 22,679 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடன் இல்லாத, லாபம் அடைவது முக்கியம் என்ற அணுகுமுறையால் உருவானது.
இதேபோல் 2024-ல் 9,993 கோடி ரூபாயாக இருந்த வருமானம் 2025-ல் 8,847 கோடி ரூபாயாக குறைந்தாலும், 4,237 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இந்த கேஷ் ரிசர்வ் நிதி, சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிக்கவும், புதிய பொருட்கள் மற்றும் நீண்டகால திட்டங்களில் முதலீடு செய்யவும் நிகில் காமத் மற்றும் நிதின் காமத்-க்கு உதவுகிறது.

'WTF' பாட்காஸ்ட்:
நிகில் காமத்தின் 'WTF is?' பாட்காஸ்ட் 2024 முதல் உலக அளவில் பிரபலமானது. இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், யூடியூப் தலைவர் நீல் மோகன், நெட்ஃப்ளிக்ஸ் இணை தலைவர் டெட் சாராண்டோஸ், இன்ஃபோசிஸ் நந்தன் நீலகாண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது மிகப்பெரிய சாதனை.
இப்போது எலான் மஸ்க் இணைவதால், இது பாட்காஸ்ட்-ன் உச்சம் என்று பாராட்டப்படுகிறது. ஆனால் இது உண்மையா..?
எலான் மஸ்க் டீசர்:
நிகில் காமத் X-ல் வெளியிட்ட 39 வினாடி வீடியோ டீசர், இருவரும் டெஸ்லா தொழிற்சாலை இயந்திரங்கள் நடுவே எலான் மஸ்க் அலுவலகத்தில் காபி குடித்துக்கொண்டு சிரிப்பதை போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. நிகில் காமத் இந்த வீடியோவுக்கு "Caption this" என்று போஸ்ட் செய்து எலான் மஸ்க்கை டேக் செய்துள்ளார். இது 38 லட்சம் பார்வைகளை தொட்டுள்ளது.
ஆனால் இந்த வீடியோவை பலரும் ஏஐ என்றும், இது நடந்தால் இண்டர்நெட் பிரேக்டவுன் ஆகிவிடும் என்றும் கமெண்ட் செய்துள்ளனர். இதோடு பலரும் அடுத்துடுத்து யாரை நிகில் காமத் இந்த பாட்காஸ்ட்-ல் கூப்பிடலாம் என்றும் பரிந்துரைகளை செய்துள்ளனர். இதில் தோனி முக்கிய பரிந்துரையாக இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் பாட்காஸ்ட்-ல் பேசுவது என்பது புதியது இல்லை, ஜோ ரோகன் பாட்காஸ்ட் முதல் பல சேனல்களில் கலந்துக்கொண்டு EV, AI, விண்வெளி, அரசியல் பற்றி பல உண்மையை மிகவும் வெளிப்படையாக பேசியவர். இந்த நிலையில் நிகில் காமத் உடனான இந்த உரையாடல் உண்மையாகும் பட்சத்தில் "இந்தியாவின் AI எதிர்காலம்" பற்றி பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications