எங்குத் திரும்பினாலும் டிவிட்டர்.. டிவிட்டர்.. தான். இந்த நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்பு டெக் ஊழியர்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகமே கூர்ந்து கவனிக்கத் துவங்கியுள்ளது.
டிவிட்டரில் தற்போது நடக்க இருக்கும் மாற்றங்கள் தான் சமுக வலைத்தளத்தின் எதிர்காலமாக மாறியுள்ளதால், எலான் மஸ்க்-ன் சில முக்கியமான முடிவுகளுக்குப் பல தரப்பினர் கடுமையான எதிர்ப்பும், எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவின் முதல் டிவிட்டர் யூசர் தற்போது பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார். யார் அந்த முதல் யூசர்..? எப்படி ட்விட்டரில் சேர்ந்தார்..?
எலான் மஸ்க் - டிவிட்டர்
எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் நிர்வாகத்தில் கடந்த வாரம் 50 சதவீத ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கப்பட்டது டெக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்து, இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ் இந்திய டிவிட்டர் அலுவலகத்தில் 200-க்கும் அதிகமாக ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில் எலான் மஸ்க் 90 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வெறும் 20-25 ஊழியர்களை வைத்து இந்தியாவில் டிவிட்டர் இயங்கி வருகிறது.
நைனா ரெது
இந்த நிலையில் டிவிட்டர்-ன் இந்தியாவின் முதல் யூசர் ஆன நைனா ரெது தற்போது இந்தியா முழுவதும் டிராண்டாகி வருவது மட்டும் அல்லாமல் டிவிட்டர் எப்படிப்பட்ட தளம், இந்தச் சமூகவலைத்தளம் எப்படி இதுநாள் வரையில் எப்படி அல்லாமல் மேம்பட்டது, புதிய மாற்றங்களை மக்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
டிவிட்டர் நிறுவனம் - TWTTR
நைனா ரெது டிவிட்டர் நிறுவனம் TWTTR ஆக இருந்த போதே இணைந்தவர், ஆர்குட் மற்றும் பிளாகிங் உச்சத்தில் இருந்த போது TWTTR உருவானது. 2006 ஆம் ஆண்டு TWTTR நிறுவனத்திடம் இருந்து இத்தளத்தில் இணைய ஈமெயில் தனது வந்ததாக நைனா ரெது தெரிவித்துள்ளார். டிவிட்டர் ப்ராஜெக்ட்-ன் code name தான் இந்த TWTR.
ஈமெயில்
இந்த ஈமெயில் மூலம் இந்தியாவில் இருந்து முதல் யூசர் ஆக நைனா ரெது சேர்ந்தார். முதலில் டிவிட்டரில் சேரும் போது இந்த அளவிற்குப் பெரியதாக வளர்ச்சி அடையும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். நைனா ரெது தற்போது ஜெய்சால்மர்-ல் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார், இதுவரை 1,75,000-க்கும் அதிகமான ட்வீட் செய்துள்ளார்.
சேட் மெசேஜ்
டிவிட்டரில் சேர்ந்த புதியதில் அதில் எவ்விதமான சேட் மெசேஜ்-ம் வராது, காரணம் அதில் யாருமே சேரவில்லை, ஆனால் டிவிட்டர் ஊழியர்களும், அவர்களது நண்பர்களின் ட்வீட் தான் அதிகம் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் தான் மும்பையில் இருந்ததாகவும், சுமார் 1.5 வருடம் பெரிய அளவிலான விருப்பம் இல்லாமல் இருந்துள்ளதாகக் கூறுகிறார்.
முதல் இந்திய யூசர்
நைனா ரெது தான் முதல் இந்திய வாடிக்கையாளர் யூசர் என்பது அமெரிக்காவில் யாரோ ஒருவர் முதல் 140 டிவிட்டர் யூசர் பட்டியலில் தனது பெயர் வந்த பின்பு தான் தனக்கே தெரியும் என்பதைக் கூறியுள்ளார். இதைத் தான் சாதித்த விஷயமாகப் பார்க்கவில்லை, எதிர்பார்க்காமல் செய்த விஷயம் என்பதைத் தான் இதைப் பெருமையாகக் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார் நைனா ரெது.
16 வருடம்
நைனா ரெது டிவிட்டரில் 16 வருடமாக இருக்கிறார், இவருக்குச் சுமார் 22000 பாலோவர்கள் உள்ளனர். இந்த நிலையில் ப்ளூ டிக் என்பது டிவிட்டர் பிரபலங்களின் உண்மையான கணக்கு என்பதைக் காட்டவே முதன் முதலில் கொண்டு வந்தது. 16 வருடமாக நான் இந்த ப்ளூ டிக் பெறவில்லை, இனியும் பெற விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
ப்ளூ டிக்
மேலும் எலான் மஸ்க் தற்போது ப்ளூ டிக் பெற வேண்டும் என்றால் 8 டாலர் பணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த 8 டாலருக்கு எந்த விதமான சிறப்புச் சேவைகள் கிடைக்கும் என்பதை டிவிட்டர் முழுமையான விளக்கம் அளிக்கவில்லை. முழுமையான விபரம் தெரிந்த பின்பு தான் வாங்குவதா வேண்டாமா என்ற முடிவு எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார் நைனா ரெது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications