இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக இருக்கும் டாடா குழுமத்தை வேகமாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் முக்கிய பொறுப்பில் உள்ளார் தமிழரான என் சந்திரசேகரன்.
டாடா குழும வரலாற்றில் 3 கட்டத்தில் மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்தது, முதலில் ஜாம்ஷெட்ஜி டாடா அவர்கள் நிறுவனத்தை துவங்கி பல பிரிவுகளில் இந்திய தொழிற்துறை மாறுவதற்கு வித்திட்டார், 2வது ரத்தன் டாடா தலைமை பொறுப்பை ஏற்றப்பின்பு டாடா ஸ்டீல், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டெலிகாம் என பல துறையில் இறங்கியது மட்டும் அல்லாமல் வேகமாக வளர்ச்சியை பதிவு செய்தது.

அடுத்ததாக டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக முதல் முதலில் டாடா குடும்பத்திற்கு வெளியில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட பின்பு டாடா குழுமத்தின் முதுகெலும்பாகவும், லாபத்தில் அளிக்கும் கொடுக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைவரான என் சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட பின்பு 3வது வேகமான வளர்ச்சி பாதை டாடா குழுமத்தின் உருவானது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக 2வது முறை பதவி நீட்டிப்பு பெற்றுள்ள என் சந்திரசேகரன் பல பிரிவுகளை மறுசீரமைப்பு செய்து தற்போது டாடா குழுமத்தை வேகமாக வளர்ச்சி பாதையில் இழுத்து செல்வது மட்டும் அல்லாமல் அடுத்த 50 வருடத்திற்கான அடித்தளம் அமைத்து வருகிறார். டிஜிட்டல் சேவைகளில் துவங்கி உற்பத்தி, ரீடைல், ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், இன்பரா, டெலிகாம் என அனைத்து துறையிலும் அசத்தி வருகிறது டாடா குழுமம்.
நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து இன்று இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்து வரும் அளவுக்கு ஒருவர் உயர முடியும் என்றால் N Chandrasekaran-ல் கூட நம்ப முடியாது. என் சந்திரசேகரன் பெரிய அளவிலான பின்புலம் இல்லாத நடுத்தர குடும்பத்தில் பிறந்தார், கல்வி மட்டுமே ஆயுதமாக பயன்படுத்தி இன்று மாபெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளார்.
சந்திரசேகரன் கோவையில் உள்ள கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியிலும் இளங்கலை பட்டமும், திருச்சியில் இருக்கும் நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார். படிப்பை முடித்த கையோடு டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தார் சந்திரசேகரன்.

படிப்பை முடித்த கையோடு டிசிஎஸ் நிறுவனத்தில் கிராஜூவேட் ட்ரைனியாக சேர்ந்து டிசிஎஸ் சிஓஓ-வாக 2 வருடம், சிஇஓ-வாக 8 வருடம் என பல பதவிகளில் சுமார் 30 வருடம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி, இன்று டாடா சன்ஸ் சேர்மன் பதவியில் 6 வருடமாக பணியாற்றி வருகிறார்.
1963 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி பிறந்த சந்திரசேகரன்-க்கு இன்று 60வது பிறந்த நாள்-ஐ கொண்டாடுகிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications