உலகின் பிரபல கோடீஸ்வரர்கள் எப்படி வாழ்க்கையில் வெற்றி கண்டனர் என்பது நம்மில் பலரும் அறிந்ததே. அவர்களை போன்று வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு.
ஆனால், அவர்கள் எங்கிருந்து துவங்கி இந்த நிலையை அடைந்துள்ளனர் என்று யோசித்திருக்கின்றீர்களா? இவர்கள் அனைவரும் தொழில்நுட்பம், முதலீடு, அழகு சாதனம், திரைப்படம் என வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள், இவர்கள் அனைவரும் அந்த துறையில் இளம் வயதிலேயே அதிக ஆர்வம் கொண்டிருந்தனர்.
தற்போது இவர்களின் பெயர் உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவர்களின் நிறுவனங்கள் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உலகின் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பில்லியனர்களின் முதன் முதலில் செய்த வேலை என்ன தெரியுமா..?
ரத்தன் டாடா
1991 ஆம் ஆண்டு டாடா குழும தலைவராக பொறுப்பேற்கும் முன், ரத்தன் டாடாவின் முதல் பணி டாடா ஸ்டீல் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி ஆகும். இந்தியாவின் தலைசிறந்த வியாபாரிகளில் இவரும் ஒருவர் ஆவார்.
திருபாய் அம்பானி
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான ரிலையன்ஸ்-ஐ துவங்கினார் திரஜ்லால் ஹிராசந்த் அம்பானி. இவர் முதன் முதலில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியில் சேர்ந்தார். பின் ஏமன் நாட்டில் ஃபைலிங் மேனேஜர் பணியை மேற்கொண்டு வந்தார். 2016 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனம், மற்றும் 50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை ரிலையன்ஸ் வழங்கி வருகிறது.
கௌதம் அதானி
கோடீஸ்வரர் ஆகும் முன் கௌதம் அதானி மஹிந்திரா பிரதர்-யிடம் வைர வியாபாரியாக பணியாற்றினர். இந்த பணியை இவர் மூன்று ஆண்டுகள் மேற்கொண்டார்.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச நிறுவனமாக உலகின் சுமார் 100-க்கும் அதிக நாடுகளில் வர்த்தகத்தையும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனர் 1981 ஆம் ஆண்டு மஹிந்திரா உஜைன் ஸ்டீல் கம்பெனி லிமிடெட்-இல் நிதி இயக்குனருக்கு நிர்வாக உதவியாளராக பணியாற்றினார்.
ஜெஃப் பெசோஸ்
அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் ஆரம்ப காலத்தில் மெக் டொணால்ட்ஸ்-இல் ஹேம்பர்கர்-களை செய்து வந்தார். இவரின் சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு மூன்று டாலர்கள் ஆகும். இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் ஒருவர் ஆவார்.
எலான் மஸ்க்
கோடீஸ்வரர் ஆகும் முன் உலகின் இரண்டாவது பணக்காரரான எலான் மஸ்க் கம்ப்யூட்டர் கேம்களை விற்று 500 டாலர்கள் வரை பெற்று வந்தார். தென் ஆஃப்ரிக்காவில் வளர்ந்து வந்த எலான் மஸ்க் 17 வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்து மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
பில் கேட்ஸ்
மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் இணை நிறுவனர் மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனரான பில் கேட்ஸ் TRW எனும் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ப்ரோகிராமர் ஆக பணியை செய்து வந்தார். இவர் தனது 15 ஆவது வயதிலேயே இந்த பணியில் சேர்ந்தார்.
வாரன் பஃபெட்
அமெரிக்க தொழிலதிபரும், உலகின் மிகப்பெரிய பங்கு முதலீட்டாளருமான பெர்க்ஷயர் ஹேத்அவே நிறுவன தலைவர் வாரென் பஃபெட் 1944 ஆம் ஆண்டு தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் டெலிவரி பாய் வேலையை செய்தார். இதற்கு மாதம் 175 டாலர்களை சம்பளமாக பெற்றுக் கொண்டார்.
மார்க் ஜூக்கர்பர்க்
ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் முதல் பணி சினாப்ஸ் எனும் மியூசிக் பிளேயரை உருவாக்குவது ஆகும். 18 வயதில் இருக்கும் போது மார்க் இதனை துவங்கினார். அங்கிருந்து இவர் தனது நண்பர்களுடன் இணைந்து உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக்-ஐ துவங்கினார்.
மார்க் கியூபன்
என்பிஏ-வின் டல்லஸ் மவெரிக்ஸ் மார்க் கியுபன் சொத்து மதிப்பு 4.4 பில்லியன் டாலர்கள் ஆகும். கோடீஸ்வரர் ஆகும் முன் இவர் வீடு வீடாக டிஸ்கோ பாடம் எடுத்து அதன் மூலம் இந்தியானா பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.
ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது நண்பரின் அறையில் தரையிலேயே படுத்து உறங்கி இருக்கிறார். வாரத்திற்கு ஒரு முறை 7 கிலோமீட்டர்கள் நடந்து கிருஷ்ணர் கோயிலில் வழங்கப்படும் இலவச உணவை சாப்பிட்டுள்ளார். எனினும், இவர் அடாரி நிறுவனத்திற்கு வீடியோ கேம்ஸ் செய்து கொடுத்திருக்கிறார் என பலருக்கும் தெரிந்திருக்காது.
ஜாக் டார்சி
அமெரிக்க கோடீஸ்வர தொழில்நுட்ப தொழிலதிபர் மற்றும் டுவிட்டர் நிறுவனர், முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டார்சி ஆரம்ப காலத்தில் மாதம் 3,700 டாலர்கள் வருமானத்திற்காக மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
எவான் ஸ்பெய்கல்
ஸ்னாப்சாட் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எவான் ஸ்பெய்கல் 25 வயதில் கோடீஸ்வரர் ஆனவர். இவரின் ஆரம்ப காலத்தில் மாதம் 385 டாலர்கள் சம்பளத்திற்கு ரெட்புல் விளம்பரதாரராக பணியாற்றி வந்தார்.
ஓப்ரா வின்ஃப்ரே
தனக்கான சொந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்ட பெண்களில் ஓப்ரா வின்ஃப்ரேவும் ஒருவர் ஆவார். அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், தனது 17 வயதில் மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்தார்.
மைக்கல் புளூம்பெர்க்
அமெரிக்க வியாபாரி மற்றும் நியூ யார்க் நகரின் முன்னாள் மேயர், புளூம்பெர்க் இணை நிறுவனர் ஆரம்ப காலத்தில் பார்கிங் அசிஸ்டண்ட் பணியை செய்து வந்தார். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த மைக்கல் புளூம்பெர்க் தனது கல்வி செலவுக்காக வேலை பார்க்க துவங்கினார். இதை தொடர்ந்து அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications