இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய் மல்ஹோத்ரா இன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதம் பதவிக்கு வந்த சஞ்சய் மல்ஹோத்ரா அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக இருப்பார். ஆனால் பிப்ரவரி 4ஆம் தேதி துவங்கிய நாணய கொள்கை கூட்டம் இவருடைய கரியருக்கு மிகவும் முக்கியமானது. யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா..? ஆர்பிஐ கவர்னராக இருப்பதற்கு முன்பு இவர் என்ன செய்துக்கொண்டு இருந்தார்..?

சஞ்சய் மல்ஹோத்ரா முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் போலவே ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார், சஞ்சய் மல்ஹோத்ரா 1990 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவர். இவர் ராஜஸ்தானில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளது மட்டும் அல்லாமல் அரசு பணியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி அனுபவத்தை கொண்டவர்.
சஞ்சய் மல்ஹோத்ரா, கான்பூரில் உள்ள IIT கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார், அதை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஆர்பிஐ கவர்னராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பு நிதிச் சேவைகள் துறையின் செயலாளராக, இந்தியாவின் நிதி மற்றும் வங்கித் துறைகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இதற்கு முன், அவர் பொதுத்துறை நிறுவனமான REC இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
2022 முதல் மத்திய வருவாய்த் துறை செயலாளராக பணியாற்றி வரும் இவர், நேரடி மற்றும் மறைமுக வரிக் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மல்ஹோத்ரா ஜிஎஸ்டி கவுன்சிலின் முன்னாள் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இப்படி மத்திய மற்றும் மாநில அரசு பொறுப்புகளில் சுமார் 33 ஆண்டு கால பணி அனுபவம் கொண்டவர் தான் தற்போதைய ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா. நிதி, மின்சாரம், வரித்துறை, தகவல் தொழில் நுட்பம், சுரங்கம் என பல முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.
இதேவேளையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் ஆர்பிஐ-யின் நாணய கொள்கை குழுவில் இருந்த 3 உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர். இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழுவில் மொத்தம் 6 உறுப்பினர்கள் உள்ளனர், இதில் 3 பேர் ஆர்பிஐ ஊழியர்கள், மீதமுள்ள 3 பேர் வெளி உறுப்பினர்கள் ஆவர்.
இந்த 6 உறுப்பினர்களைக் கொண்ட நாணய கொள்கை குழு தான் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கும், அதிகரிப்பதற்கும் பொறுப்பானது. இந்த நிலையில் ராம் சிங், நாகேஷ் குமார் மற்றும் சௌகதா பட்டாச்சார்யா ஆகியோர் மூன்று பதிய வெளிப்புற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாத கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பிப்ரவரி 4ஆம் தேதி துவங்கிய நாணய கொள்கை குழு கூட்டம் ஆர்பிஐ கவர்னர் முதல் 3 புதிய உறுப்பினர்கள் வரையில் அனைவருக்கும் புதிய அனுபவமாக இருக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications