15% ஊதிய உயர்வு கிடைக்காததால் ராஜினாமா செய்த ஊழியர்.. 55% ஊதிய உயர்வுடன் மீண்டும் அழைத்த நிறுவனம்..

வேலையை விட்டு சென்ற ஊழியரை தயவு செய்து திரும்ப வாருங்கள் என அழைத்து 55 சதவீத ஊதிய உயர்வு கொடுத்த நிறுவனம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் இதற்கு முன்பு பணி செய்த நிறுவனத்தில் இருந்து தான் ராஜினாமா செய்ததாகவும், அந்த நிறுவனம் மீண்டும் கெஞ்சி கூத்தாடி தன்னை பணியில் சேர்த்துக் கொண்டது என்றும் பதிவு செய்து இருக்கிறார்.

ரெடிட் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் தான் வேலை செய்து வந்த நிறுவனத்தில் 15% ஊதிய உயர்வு கேட்டேன் ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர் என கூறியிருக்கிறார். உடனே தான் வேலையை ராஜினாமா செய்ததாகவும், அதே நிறுவனம் சில மாதங்களுக்கு உள்ளே தனக்கு 55 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து பதவி உயர்வும் தந்து வேலைக்கு எடுத்துக் கொண்டதாக கூறி இருக்கிறார்.

15% ஊதிய உயர்வு கிடைக்காததால் ராஜினாமா செய்த ஊழியர்.. 55% ஊதிய உயர்வுடன் மீண்டும் அழைத்த நிறுவனம்..

என்னுடைய பாஸிடம் 15% ஊதிய உயர்வு கேட்டேன் அவர் இல்லை என்றார், நான் வேலையை விட்டு சென்றுவிட்டேன். சில மாதங்களில் அவரே என்னை அழைத்து 55 சதவீதம் ஊதிய உயர்வு தந்து பதவி உயர்வு தந்து மீண்டும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இந்த கதையை நான் அனைவரிடமும் பகிர வேண்டும் என்பதற்காகவே தற்போது வெளியிடுகிறேன் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Take a Poll

இந்த நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டபோது உங்களுக்கு போதி அனுபவம் இல்லை ,தற்போது எங்களிடம் பட்ஜெட் கிடையாது, நீங்கள் இன்னும் வளர வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தனர் . ஒரு காலகட்டத்தில் நான் விரக்தி அடைந்து வேலையை விட்டு சென்று விட்டேன் ஆனால் நான் சென்ற பிறகுதான் அவர்களுக்கு என்னுடைய மதிப்பு புரிந்து இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

அதாவது இவர் அந்த பணியை விட்டு சென்ற பிறகு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலரும் நிறுவனத்தின் சேவை முன்பு போல தரமாக இல்லை என்றும் புகார் தந்தார்களாம். மேலும் குறித்த தேதிக்குள் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என குறை கூறினார்களாம். இதன் காரணமாக அந்த நிறுவனம் மீண்டும் இவரையே திரும்ப அழைத்து அந்த பணியில் நியமனம் செய்திருக்கிறது. அப்போது இவருக்கு 55 சதவீத ஊதிய உயர்வும் பதவி உயர்வும் வழங்கினார்கள்.

அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது ஒரு பயனர் இதைக் கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நிறுவனங்கள் ஒரு ஊழியரின் மதிப்பை உணர்ந்தால் தான் அவருக்கு உரிய சம்பளத்தையும் பதவியையும் வழங்குவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் எனக் கூறியிருக்கிறார். சிலரோ இதெல்லாம் நம்புற மாதிரி இல்லை, நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்ள வாய்ப்பில்லை என கூறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+