வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரையில் இந்தக் கொரோனா படியில் இருந்து தப்பிக்க முடியாமல் தவித்து வருகிறது. பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியாகவும், மக்கள் நலனிலும் உலக நாடுகள் மிகப்பெரிய அளவிலான பின்னடைவை இந்தக் கொரோனா பாதிப்பால் எதிர்கொண்டுள்ளது.
இதன் எதிரொலியாகக் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் ஆஸ்திரேலியா சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் இந்நாட்டில் தற்போது வேலைவாய்ப்பு முதல் வர்த்தகம் வரையில் பெரிய அளவிலான பாதிப்பை இனி வரும் வாரங்களில் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா
கொரோனா பாதிப்பால் பல்வேறு வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சந்தித்து வரும் ஆஸ்திரேலியா-வின் பொருளாதாரம் ஜூன் காலாண்டில் -7 சதவீதமாகச் சரிந்துள்ளது என அந்நாட்டு அரசு தரவுகளை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா கடந்த 1959ஆம் ஆண்டு முதல் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவீடுகளைப் பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார வரலாறு
ஆஸ்திரேலியா 1974ஆம் ஆண்டுப் பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டுப் பொருளாதாரம் -2 சதவீதம் வரையில் சரிந்தது. இதேபோல் 1930களில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் -9.5 சதவீதம் வரையில் சரிந்திருக்க வாய்ப்பு உள்ளது கணித்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியா தனது பொருளாதார மற்றும் வர்த்தகத் தகவல்களை 1959ஆம் ஆண்டு முதல் தான் பதிவு செய்யத் துவங்கியுள்ளது. இதனால் 1974ஆண்டில் ஏற்பட்ட சரிவே மிகப்பெரிய பொருளாதாரச் சரிவாகப் பார்க்கப்படுகிறது.
ரெசிஷன்
மார்ச் காலாண்டில் ஆஸ்திரேலியா பொருளாதாரம் -0.3 சதவீதமாகச் சரிந்த நிலையில், ஜூன் காலாண்டில் - 7 சதவீதம் வரையில் சரிந்து தொடர்ந்து 2 காலாண்டுகளாகப் பொருளாதாரம் சரிந்து அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பொதுவாக எந்தொரு நாடு தொடர்ந்து 2 காலாண்டுகளாகப் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்கிறதோ அப்போது Recession என அறிவிக்கப்படும்.
இந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியா பொருளாதார நெருக்கடியில் சிக்கி Recession-ல் இருக்கிறது.
வளர்ச்சி பாதை
கடந்த 28 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்த நிலையில் முதல் முறையாகச் சரிவை எதிர்கொண்டுள்ளது. இதன் மூலம் கடந்த 28 வருட வளர்ச்சி பாதையில் முதல் சரிவை அடைந்துள்ளது. இந்தப் பாதிப்புகள் அனைத்தும் கொரோனாவின் எதிரொலியால் ஏற்பட்டது என்றும், கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என்பதை ஆஸ்திரேலிய நிதி அமைச்சர் Josh Frydenberg செய்தியாளர்களுக்கும், தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு இது மிகவும் மோசமான காலம் என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications