அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி, கடந்த வாரம் திவாலாகிய நிலையில் அமெரிக்க அரசு நேரடியாக அனைத்து டெபாசிட்-களுக்கு உத்தரவாதம் அளித்தது.
2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாக சிலிகான் வேலி வங்கி திவால் கருதப்படுகிறது. ஆனால் இதை தொடர்ந்து சிக்னேச்சர் வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு FDIC அமைப்பு கட்டுப்பாட்டை எடுத்தது.
ஆனால் இதோடு நிற்கவில்லை, அமெரிக்காவில் 3 ஆவது பெரிய வங்கியாக, First Republic Bank திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதோடு மூடிஸ் அமைப்பு ஃபஸ்ட் ரிப்பப்ளிக் வங்கியின் டெபிட் ரேட்டிங்-ஐ மறு ஆய்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இவ்வங்கியை காப்பாற்ற அமெரிக்காவில் சுமார் 11 வங்கிகள் கூட்டணி சேர்ந்து 30 பில்லியன் டாலர் நிதியை திரட்டியுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவில் FTX திவாலானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்நாட்டு நிதியியல் சந்தையில் பெரும் பிரச்சனைகள் வெடிக்க துவங்கியது. இதே வேளையில் பணவீக்கத்தை சமாளிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கிய காரணத்தால் பத்திர முதலீடுகள் அதிகரித்தது, வங்கி கடனை நம்பியிருக்கும் வர்த்தகம் அதிகப்படியாக பாதிக்கப்பட்டது.
Silvergate வங்கி
இந்த நிலையில் அமெரிக்காவில் FTX திவாலானதாக அறிவித்த பின்பு, Silvergate வங்கி திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. Silvergate Bank தானாக திவாலானதாக அறிவித்துக்கொண்டு தனது வர்த்தகத்தை மூடியது.
சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி
சிலிக்கான் வேலி வங்கி பத்திர முதலீடுகளில் அதிகப்படியான முதலீடுகள் மாடிக்கொண்ட இருக்கும் நிலையில் வித்டிராவல் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் திவாலானது. இதன் வாயிலாக collateral Damage ஆக சிக்னேச்சர் வங்கியும் மாட்டிக்கொண்டது.
அடுத்தது First Republic Bank
இந்த வரிசையில் தற்போது திவாலாக காத்திருக்கும் முக்கிய வங்கி First Republic Bank, இதை காப்பாற்றவே பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி குரூப், ஜேபி மோர்கன் சேஸ் உட்பட அந்நாட்டின் முக்கியமான 11 வங்கிகள் இணைந்து சுமார் 30 பில்லியன் டாலர் தொகையை First Republic Bank-ல் டெபாசிட் செய்துள்ளது.
10 சதவீதம் உயர்வு
முதல் முறையாக ஒரு வங்கியை காப்பாற்ற பல முன்னணி வங்கிகள் ஒன்று திரண்டுள்ளது, இதன் மூலம் அமெரிக்க நிதியமைப்பு மோசமாவதில் இருந்து காப்பாற்றப்படும். இதன் மூலம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் First Republic Bank பங்குகள் 10 சதவீதம் உயர்வுடன் முடிந்துள்ளது.
30 பில்லியன் டாலர்
பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி குரூப், ஜேபி மோர்கன் சேஸ், வெல்ஸ் பார்கோ ஆகியவை தலா 5 பில்லியன் டாலர் தொகை பாதுகாப்பற்ற டெபாசிட் ஆக First Republic Bankயில் டெபாசிட் செய்துள்ளது. இதைதொடர்ந்து கோல்டுமேன் சாச்ஸ், மோர்கன் ஸ்டான்லி தலா 2.5 பில்லியன் டாலர் முதலீட்டை செய்தது. பிஎன்சி வங்கி, US BANK உட்பட மொத்தம் 5 வங்கிகள் தலா 1 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
212 பில்லியன் டாலர்
1985 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட First Republic Bank அமெரிக்காவில் 14வது பெரிய வங்கியாகும். இவ்வங்கியில் சுமார் 212 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது, சான் பிரான்சிஸ்கோ-வை தலைமையிடமாக கொண்டு இயங்கும் First Republic Bank நியூயார்க், ப்ளோரிடா என மொத்த கிழக்கு கடற்கரை பக்கத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications