கடந்த வார வெள்ளிக்கிழமை முதலே சிலிக்கான் வேலி வங்கியின் திவால் பற்றிய செய்தி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிலிக்கான் வேலி வங்கி திவால் நிலைக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து நியூ யார்க்கைச் சேர்ந்த பிராந்திய வங்கியான சிக்னேச்சர் வங்கியும் (Signature Bank) திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஃபஸ்ட் ரிப்பப்ளிக் வங்கியும் (First Republic Bank) திவாலாகி, மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகள் திவாலாகலாம் எனவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சிலிக்கான் வங்கி திவால்!
அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி கடந்த வாரம் திவாலாகிவிட்டது. 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாக சிலிகான் வேலி வங்கி திவால் கருதப்படுகிறது.
வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் சொத்துகளுக்கும், கடன்களுக்கும் இடையே நெருக்கடி ஏற்பட்டு சிலிக்கான் வேலி வங்கி கவிழ்ந்துவிட்டது. இதையடுத்து சிலிக்கான் வேலி வங்கியை அமெரிக்க அரசு மூடிவிட்டது. டெபாசிட்டர்களுக்கு பணத்தை திருப்பி தருவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.
மற்ற வங்கிகளுக்கும் பதிப்பு!
இந்நிலையில், சிலிகான் வேலி வங்கி திவாலானதன் எதிரொலி மற்ற வங்கிகளுக்கும் பரவி வருவதாக தெரிகிறது. தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த 3 ஆவது பெரிய வங்கியான First Republic Bank திவாலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூடிஸ் அறிக்கை!
மூடிஸ் (Moody) என்பது ஒரு நிறுவனத்தின் நிதி நிலையை அடிப்படையாக கொண்டு பல முக்கியமான காரணிகளை ஆய்வு செய்து டெபிட் ரேட்டிங் கொடுக்கும். இந்த ரேட்டிங் அடிப்படையில் முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் நிதிநிலையைக் கண்டறிய உதவியாக இருக்கும்.
இந்நிலையில் மூடிஸ் அமைப்பு ஃபஸ்ட் ரிப்பப்ளிக் வங்கி உட்பட 5 அமெரிக்க கடன் வழங்கும் வங்கிகளான ரேட்டிங்கை மறு ஆய்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
மறு ஆய்வு
அதில் Western Alliance Bancorp, Intrust Financial Corp., UMB Financial Corp., Zions Bancorp., and Comerica Inc நிறுவனங்களின் மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்து அதன் கிரெடிட் ரேட்டிங்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bloomberg அறிக்கை!
ப்ளூபெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் பங்குகளின் விலை 74.25% குறைந்துள்ளது, மேலும் பங்குகள் 61.83% குறைந்துள்ளன. கடந்த வர்த்தக நாட்களின் அதன் ஒரு பங்கின் விலை 19 டாலர் என்ற குறைந்த புள்ளியை எட்டியதாக குறிப்பிட்டுள்ளது.
S&P குளோபல் ரேட்டிங்ஸ் மற்றும் ஃபிட்ச் மதிப்பீடுகள்!
புதன்கிழமையன்று S&P குளோபல் ரேட்டிங்ஸ் மற்றும் ஃபிட்ச் நிறுவனங்கள் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் கடன் மதிப்பீடுகளில் மோசமான நிலையில் உள்ளதாக அதாவது நெகட்டிவ் ரேட்டிங் என்று அழைக்கப்படும் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட வங்கியிடமிருந்து வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்பப் பெறுவார்கள் என்று ஏஜென்சிகள் கூறுகின்றன.
லிஸ்ட் இன்னும் முடியல!
அமெரிக்க வங்கித் துறையின் பேரழிவில் மூழ்கியிருக்கும் வங்கிகளின் பட்டியலில் இன்னும் கூடுதல் பெயர்கள் சேர்க்கப்படலாம் என்று மூத்த அமெரிக்க முதலீட்டாளரான பில் அக்மேன் சுட்டிக்காட்டியுள்ளார். சிலிக்கான் வேலி வங்கி திவாலானதைத் தொடர்ந்து பல வங்கிகள் பாதிக்கப்படும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications