வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான் முதன்மையான இலக்காக இருக்கும். இதற்காக சிறுக சிறுக பணம் சேமிக்கத் தொடங்கி இருப்பார்கள். இருந்தாலும் வாழ்க்கைச் செலவுகள் வாட்டி வதைக்கும் சூழலில் ஒரு வீட்டை கடன் பெறாமல் வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்காக பலரும் ஹோம் லோன்களை நாடுகின்றனர்.
முதல்முறையாக வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வங்கிகளும் கடன் வழங்குகின்றன, NBFC நிறுவனங்களும் கடன் வழங்குகின்றன. இவை இரண்டில் எது ஏதுவாக இருக்கும்? எங்கு கடன் பெற்றால் நல்லது? என்ற விவரங்கள் குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

முதல்முறையாக வீடு வாங்க திட்டமிடும்போது எங்கிருந்து கடன் பெறுவது என்பதுதான் மிகப்பெரிய குழப்பமாக இருக்கும். வங்கியில் இருந்து கடன் பெறலாமா? அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களான NBFC-களில் கடன் பெறலாமா? என்பது அனைவருக்கும் இருக்கும் சந்தேகம்.
வங்கிகளும் ஹோம் லோன் வழங்குகின்றன. அதேபோல NBFC நிறுவனங்களும் கடன் வழங்குகின்றன. குறிப்பாக முதல் முறையாக கடன் பெற நினைப்பவர்களுக்கு, கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளவர்களுக்கு, சம்பளம் இல்லாதவர்களுக்கு என பலதரப்பட்ட மக்களுக்கும் NBFC நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன.
இந்நிறுவனங்கள் குறைவான விதிகளை தான் கொண்டுள்ளன. NBFC நிறுவனங்கள் வங்கிகளைப் போலவே கடன்களை வழங்கினாலும் இவை ரிசர்வ் பேங்கின் கடுமையான விதிகளுக்கு உட்பட்டவை அல்ல. வட்டி விகிதங்கள், கடன் விதிமுறைகள் மற்றும் செயலாக்கு கட்டணங்கள் என NBFC நிறுவனங்கள் தங்களுக்கு ஏதுவான விதிமுறைகளை வகுத்திருக்கும்.
NBFC நிறுவனங்களுக்கு மக்கள் செல்ல காரணம் என்ன?: முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு எங்கு கடன் வாங்குவது? என்ன செய்வது? என்ற குழப்பம் அதிகமாக இருக்கும். இப்படி இருக்கையில் செயலாக்கம் முதல் கடன் ஒப்புதல் வரை அனைத்தையும் NBFC நிறுவனங்கள் விரைவாக செய்கின்றன.
அதோடு ஸ்டெப் அப் ஈஎம்ஐ விருப்பங்கள், நீண்ட கால கடன் திருப்பி செலுத்தும் வசதி போன்றவையும் சாமானியர்களுக்கு ஏதுவாக உள்ளன. இதனால் தான் முதல் முறை கடன் பெறுபவர்கள் NBFC நிறுவனங்களை நாடுகின்றனர்.
வங்கிகள்: NBFC நிறுவனங்களை விட வங்கிகளில் வட்டி குறைவாக இருக்கும். உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் வங்கிகளில் எளிதாகக் கடன் பெற முடியும். இந்தக் கடன்கள் முற்றிலும் பாதுகாப்பானவை. செயலாக்க கட்டணங்கள், முன்கூட்டியே பணம் செலுத்தும் கட்டணங்கள் போன்றவை வங்கிகளிலும் சரி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலும் சரி ஒன்றாகத் தான் இருக்கும். அதே நேரம் வங்கிகள் நிதி ரீதியாக நிலையானதாகவும் நம்பகமானதுவும் கருதப்படுகின்றன.
வங்கி மற்றும் NBFC போன்றவற்றில் எதைத் தேர்வு செய்வது?: உங்களிடம் நிலையான வேலை, வழக்கமான வருமானம், நல்ல கிரெடிட் ஸ்கோர் ஆகியவை இருந்தால் வங்கியிலிருந்து கடன் பெறுவது மலிவான விருப்பமாக இருக்கும். அதுவே உங்களிடம் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்து ஃப்ரீலான்சிங் போன்ற வருமானம் அவ்வப்போது கிடைக்கும் வேலையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு NBFC சிறந்த தேர்வாக இருக்கும்.
கடன் வாங்குவதற்கு முன்பு வட்டி விகிதங்கள், செயலாக்க கட்டணங்கள், ஈஎம்ஐ ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களின் ரிவியூக்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டு கடன் பெற விண்ணப்பியுங்கள். வங்கிகளும் சரி.. NBFC நிறுவனங்களும் சரி இரண்டுமே கடன்களை வழங்குகிறது. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது? என்பது அந்தந்த நபரை பொறுத்தது. உங்களுக்கு வட்டிச் செலவை குறைக்கும், அதே சமயத்தில் தேவையை தீர்க்கும் நிறுவனங்களை நாடுவது அவசியம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications