உலகின் பணக்காரர்கள் பட்டியல் மற்றும் அமெரிக்காவின் பணக்காரர்கள் பட்டியல்களை அவ்வப்போது ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் அமெரிக்காவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வெளியேறி உள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில மாதங்களாக கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் அவர் முதல்முறையாக 7 ஆண்டுகளுக்கு பின் முதல் 10 இடங்களில் தற்போது இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்
38 வயதான ஜுக்கர்பெர்க், 2021ஆம் ஆண்டில் இருந்து தனது சொத்துக்களை பங்குச்சந்தை சரிவால் இழந்து வருகிறார். 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் அவரது சொத்து மதிப்பு $76.8 பில்லியன் என இருந்த நிலையில் இந்த ஆண்டு $57.7 பில்லியன் நிகர சொத்து மதிப்பை அவர் கொண்டுள்ளார், மேலும் ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி அவர் 11வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 2015ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக அவர் அமெரிக்க பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடங்களில் இல்லை.
முதல் 5 பணக்காரர்கள்
அமெரிக்காவின் முதல் 5 பணக்காரர்களாக எலோன் மஸ்க் ($251 பில்லியன்), ஜெஃப் பெசோஸ் ($151 பில்லியன்), பில் கேட்ஸ் ($106 பில்லியன்), லாரி எலிசன் ($101 பில்லியன்), வாரன் பஃபெட் ($97 பில்லியன்) ஆகியோர் உள்ளனர். வால்மார்ட் வாரிசு ஜிம் வால்டன், முன்னாள் நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் மற்றும் முன்னாள் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் மற்றும் கூகுள் நிறுவனர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
முதல் 10 இடங்களில் இருந்து வெளியேற்றம்
முதல் 10 பணக்காரர் பட்டியலில் இருந்து 7 ஆண்டுக்கு பின் மார்க் ஜூக்கர்பெர்க் வெளியேறியதற்கு அவரது நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததே காரணம் என ஃபோர்ப்ஸ் கூறுகிறது. கடந்த ஆண்டு மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 57% சரிந்துள்ளன என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
மற்ற நிறுவனங்கள்
மெட்டா மட்டுமின்றி அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில மாதங்களாக சரிவில் உள்ளன. மைக்ரோசாப்ட் 14% சரிவும், கூகுள்-பேரண்ட் ஆல்பாபெட்' கள் 25% சரிவும், அமேசான் 27% சரிவும் அடைந்துள்ளதாக அறிக்கை ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2008ல் பில்லியனர்
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 2008 ஆம் ஆண்டில் முதல் முறையாக பில்லியனர் ஆனார். ஃபேஸ்புக்கை நிறுவிய நான்கு ஆண்டுகளில் அவர் பில்லியனர் ஆனது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் 321 வது இடத்தை 23 வயதில் பெற்றார். 2008ஆம் ஆண்டு $1.5 பில்லியன் நிகர சொத்து மதிப்புடன் இருந்த மார்க், 2011 ஆம் ஆண்டு அவரது நிகர சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகரித்து $17.5 பில்லியனாக இருந்தது.


Click it and Unblock the Notifications