ஒரு அரசாங்கத்தை நல்ல படியாக நடத்த, போதுமான பணம் வேண்டும். அரசுக்குத் தேவையான பணம் எங்கிருந்து வருகிறது..?
வரிகள், வரி அல்லாத வருவாய்கள் மற்றும் கடன் வழியாக வருகிறது. கடன் வாங்கியே மொத்த செலவுகளையும் செய்தால் அந்த கடனை யார் அடைப்பது. நாம் தானே..!
ஆக, வரி & வரி அல்லாத வருவாய்கள் வழியாக வரும் வருமானங்களையும், கடனையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு செலவழிக்க வேண்டி இருக்கிறது. அப்படி அரசாங்கத்தின் நிதி நிலைகளைச் சொல்லும் தரவுகளில் மிகவும் முக்கியமான ஒன்று தான் இந்த Fiscal deficit என்று சொல்லப்படுகிற நிதிப் பற்றாக்குறை.
Fiscal deficit என்றால் என்ன?
ஒரு நாட்டு அரசு செலவழிக்கும் தொகையை விட, அந்த நாட்டு அரசுக்கு கிடைக்கும் வருவாய் குறைவாக இருந்தால், அதைத் தான் நாம் Fiscal deficit என்று சொல்கிறோம். உதாரணம்: இந்தியாவின் மொத்த செலவு 100 ரூபாய், மொத்த வருவாய் 80 ரூபாய் என்றால் Fiscal deficit 20 ரூபாய். பல ஆண்டு காலமாக இந்தியா, தன் Fiscal deficit பிரச்னையை சரி செய்ய போராடிக் கொண்டு இருக்கிறது.
2019 - 20
நேற்று இந்தியாவின் மார்ச் 2020 காலாண்டு ஜிடிபி, 3.1 சதவிகிதமாக வளரலாம் எனவும், 2019 - 20 முழு நிதி ஆண்டுக்கான ஜிடிபி 4.2 சதவிகிதமாக வளரலாம் என மதிப்பிட்டு இருக்கிறது அரசு. அதோடு இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை (Fiscal deficit) கணித்து இருந்த 3.8 சதவிகிதத்தை விட சுமார் 0.8 % அதிகரித்து 4.6 சதவிகிதத்தைத் தொட்டு இருக்கிறது.
வருவாய் இல்லை
கொரோனா லாக் டவுன் பிரச்சனையால், அரசுக்கு வர வேண்டிய பல வரி வருவாய்கள் 2019 - 20 நிதி ஆண்டில் வந்து சேரவில்லை. அரசுக்கு 2019 - 20 நிதி ஆண்டில் 19.31 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வரும் எனக் கணித்து இருந்தார்களாம். ஆனால் 17.5 லட்சம் கோடி ரூபாய் தான் வருவாய் வந்து இருக்கிறதாம்.
செலவு அதிகம்
சரி ஒரு பக்கம் வருவாய் வரவில்லை என்பது உண்மை தான், ஆனால் மறு பக்கம், செலவும் கணித்து இருந்த அளவான 26.86 லட்சம் கோடி ரூபாயை விட, கொஞ்சம் அதிகமாக, 26.98 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்களாம். எப்போது இந்த நிதிப் பற்றாக்குறை பிரச்சனை எல்லாம் தீர்ந்து, மீண்டும் பொருளாதாரம் சரியாகுமோ தெரியவில்லை.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications