டெல்லி: இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் குறையும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.
இது முன்னதாக 7.8% ஆக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 7% ஆக குறைத்துள்ளது.
இது அடுத்த நிதியாண்டில் இன்னும் குறைந்து 6.7% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. இந்த விகிதமானது முன்னதாக 7.4% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?
இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 13.5% ஆக வளர்ச்சி கண்டிருந்தது. எனினும் இது 18.5% என்ற எதிர்பார்ப்பினை விட குறைவாகவே இருந்தது.சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் பல சர்வதேச நாடுகளும் மந்த நிலையை எதிர்கொள்ளும் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் தான் இந்தியாவின் வளர்ச்சி விகிதமும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி அதிகரிக்கும்
ரிசர்வ் வங்கியானது பணவீக்கத்தினை குறைக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்த உள்ளதாக கூறிவருகின்றது. இதற்கிடையில் ஃபிட்ச்- ம் வட்டி விகிதத்தினை தொடர்ந்து மத்திய வங்கி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு முடிவுக்குள் வட்டி விகிதம் 5.9% எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தினை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியில் தாக்கம்
எனினும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் மத்திய வங்கியாளர்கள் வட்டி விகிதத்தினை 6% ஆக கூட அதிகரிக்கலாம். இது ஆச்சரியப்படுவதற்கில்லை.சர்வதேச அளவில் நிலவி வரும் நிலைக்கு மத்தியில் மத்திய வங்கி பணவியல் கொள்கையில் கட்டுப்பாடுகளை விதிப்பதை தவிர வேறு வழியில்லை.
சர்வதேச வளர்ச்சி
சர்வதேச வளர்ச்சி விகிதமானது 2.4% ஆக வளர்ச்சி காணலாம் என பிட்ச் கணித்துள்ளது. இது முந்தைய கணிப்பினை விட 0.5% குறைவாகும். இதே 2023ம் ஆண்டில் 1.7% மட்டுமே வளர்ச்சி காணலாம் எனவும், இதனை முந்தைய கணிப்பினை காட்டிலும் 1% குறைத்தும் உள்ளது.
ரெசசன்
இது ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரெசசனை எதிர்கொள்ளலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதே 2023ன் நடுப்பகுதியில் ரெசசன் வரலாம் என்ற அச்சம் உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மோசமான தாக்கத்தினை காணலாம் என்றும் பிட்ச் கணிப்பு எச்சரித்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications