மும்பை: சர்வதேச ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் வாகன தேவையானது 20% வீழ்ச்சி காணலாம் என்று கணித்துள்ளது.
உள்நாட்டில் வாகன தேவையானது நடப்பு நிதியாண்டில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக தேவை குறையலாம். இதோடு தற்போது கொரோனா வைரஸினாலும் பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன.
எனினும் ஜூலை மாதத்தில் லாக்டவுனை தளர்த்திய நிலையில், இது ஓரளவு முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ள என்று ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன துறையானது பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றது. உள்நாட்டு வாகன தேவையானது தொடர்ந்து பல சவால்களை எதிர்கொள்கிறது. மேலும் இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த தொழில்துறை அளவு 20% மேலாக குறைந்து வருவதாகவும் நாங்கள் கணித்துள்ளோம்.
இதோடு கொரோனா தொற்று நோயின் தாக்கமும் நாம் எதிர்பார்ப்பதை விட மோசமாக இருந்தால், இந்த முன்னறிவிப்பை மாற்றியமைக்க முடியும் என்று ஃபிட்ச் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட பிஎஸ் ஆறாம் விதிகளை பின்பற்றி தயாரிக்கப்படுவதால், அதிக செலவினங்களால் விலை அதிகரிப்பு, அதே சமயம் பலவீனமான நுகர்வோர் உணர்வு, தொற்று நோய்க்கு மத்தியில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி அதிகரித்துள்ளது.
இது சுகாதார காரணங்களுக்காக தனியார் போக்குவரத்துக்கு விருப்பம் இருந்தபோதிலும், முதல் முறையாக கார் வாங்குபவர்களிடமிருந்து தேவை அதிகரித்திருந்த நிலையிலும், நிலவி வரும் நெருக்கடி காரணமாக தேவை கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
கடன் வழங்குனர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதால், குறிப்பாக வர்த்தக வாகனங்களுக்கு இந்த தொற்று நோய் நிதி கிடைப்பதை குறைத்துள்ளது. இதன் காரணமாக வர்த்தக வாகனங்கள் விற்பனையானது குறையலாம் என்றும் கூறப்படுகிறது.

இதே முதல் காலாண்டில் பயணிகள் வாகன விற்பனையானது முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் மாதத்தினை விட, ஜூலை மாதத்தில் 73% அதிகரித்துள்ளது. இதே இரு சக்கர வாகன விற்பனையானது 26% அதிகரித்துள்ளது. எனினும் கார் விற்பனையானது ஜூலை மாதத்தில் 4% குறைந்துள்ளதாகவும், இருசக்கர வாகன விற்பனையானது 15% குறைந்துள்ளதாகவும், இதே ஜூன் மாதத்தில் முறையே 50% மற்றும் 39% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே பயன்பாட்டு வாகனங்கள் விற்பனையானது ஜூலை மாதத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 14% வீழ்ச்சி கண்டுள்ளது. இது ஜூன் மாதத்தில் 31% வீழ்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications