அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்புக்கு 5 பிள்ளைகள் இருக்கின்றனர். ஒரு தந்தையாக தன்னுடைய பிள்ளைகளை அவர் சிறப்பாக வளர்த்துள்ளார். 1946 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் டொனால்ட் டிரம்ப். தொழிலதிபராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு குடியரசு கட்சியில் உறுப்பினராகி இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் அரியணையில் அமர்ந்திருக்கிறார்.
டிரம்புக்கு மூன்று மனைவிகளும் ஐந்து பிள்ளைகளும் இருக்கின்றனர். இவானா, மர்லா, மெலனியா என மூன்று மனைவிகள் உள்ளனர். தற்போது மெலனியாவுடன் தான் இவர் இருக்கிறார்.

டிரம்ப் ஜூனியர்: டிரம்பின் முதல் மனைவியான இவானாவுக்கும் டிரம்புக்கும் பிறந்தவர் தான் டொனால்ட் டிரம்ப் ஜூனியர். 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்காவில் வார்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார், டிரம்ப் நிறுவனத்தில் தற்போது துணை தலைவராக இவர் செயல்பட்டு வருகிறார் . ரியல் எஸ்டேட் , சில்லறை விற்பனை மற்றும் ஹோட்டல் உள்ளிட்ட தொழில்களை இவர் கவனித்து வருகிறார். தந்தையின் தேர்தல் பிரச்சாரங்களிலும் இவரை நாம் பரவலாக காண முடியும்.
இவாங்கா: டிரம்பின் முதல் மனைவியான இவானாவுக்கு பிறந்தவர். 1981 ஆம் ஆண்டு பிறந்த இவாங்கா அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில் பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து வார்டன் பள்ளியில் பொருளாதாரப் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார். தன்னுடைய தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலை கவனித்துக் கொள்கிறார். அத்துடன் பேஷன் தொழிலிலும் ஈடுபட்டு இருக்கிறார். டொனால்ட் டிரம்பின் முதல் நான்கு ஆண்டு கால ஆட்சியில் இவர் மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கும் டிரம்ப் தன் மகளை அழைத்து செல்வார்.
எரிக் டிரம்ப்: இவானா மற்றும் டிரம்ப் தம்பதியின் மகன் இவர். 1984 ஆம் ஆண்டு பிறந்த இவர் பொருளாதாரம் மற்றும் மேலாண்மை பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். டிரம்ப் நிறுவனத்தின் துணை தலைவராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ரியல் எஸ்டேட் நிறுவனங்களை இவர் தலைமை ஏற்று கவனித்து வருகிறார்.
டிஃபானி டிரம்ப்: டிரம்புக்கும் மர்லாவுக்கும் பிறந்த ஒரே குழந்தை. 1993 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டு சட்டப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சட்ட ரீதியிலான பணிகளிலும், தேசிய சைபர் செக்யூரிட்டி பணிகளிலும் இவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
பேரான் டிரம்ப்: டிரம்பின் மூன்றாவது மனைவியான மெலனியாவுக்கும் பிறந்தவர் தான் பேரான் டிரம்ப். இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் தற்போது வணிக பிரிவில் மேற்படிப்பை படித்து வருகிறார். இவர் பார்ப்பதற்கு இளம் வயது டிரம்பை போலவே இருக்கிறார்.
டிரம்ப் போட்ட ரூல்ஸ்: டிரம்ப் தன்னுடைய பிள்ளைகள் அனைவரையும் கண்டிப்புடனே வளர்த்தாராம். பிள்ளைகள் யாரும் போதை மருந்து அருந்தக்கூடாது, புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என மிகவும் சிறப்பான தந்தையாகவே வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது, குறிப்பாக யாரும் டாட்டூ போடக்கூடாது என அறிவுறுத்துவாராம். சிறப்பாக படிக்க வேண்டும் கடினமாக உழைக்க வேண்டும் என அடிக்கடி கூறுவாராம். அதற்கு ஏற்றப்படியே டிரம்பின் பிள்ளைகள் அனைவருமே தனித்திறன் கொண்டவர்களாகவும் தொழில் ரீதியாக நல்ல திறமை வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
Story Written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications