2024 ஆம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் மேலும் விரிவடைய உள்ளது. 5 புதிய எக்ஸ்பிரஸ்-வேக்கள் அடுத்த 12 மாதங்களுக்குள் புதிதாகத் தொடங்கப்பட உள்ளன என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே இந்த எக்ஸ்பிரஸ்-வேக்களில் சிலவற்றையாவது அடுத்த சில மாதங்களில் இயக்குவோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்துள்ளார்.

2024 மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆளும் பாஜக அரசு புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது.
டெல்லி- மும்பை எக்ஸ்பிரஸ்வே திட்டம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். தேசியத் தலைநகரை, பொருளாதார தலைநகருடன் இந்த எக்ஸ்பிரஸ்வே இணைக்கும்.
இதுபற்றி நிதின் கட்காரி கூறுகையில், இந்த எக்ஸ்பிரஸ்வே பிப்ரவரிக்குள் கட்டிமுடிக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
ஹரியானாவின் சோனாவில் இருந்து ராஜஸ்தானின் தௌஸா வரை முதல் எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்படும். மொத்தம் 1386 கி.மீ. தூரம் இருக்கும். இந்த எக்ஸ்பிரஸ்வே டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களைக் கடந்து செல்லும்.
பெங்களூரு- சென்னை எக்ஸ்பிரஸ்வே டெல்லி- மும்பை எக்ஸ்பிரஸ்வேக்கு முன்னதாகவே செயல்படுத்தப்படும். 262 கி.மீ. நீளமுள்ள இந்த எக்ஸ்பிரஸ்வே அடுத்த சில மாதங்களில் செயல்படும். விமானத்தில் செல்வதை விட விரைவாக இந்த தடங்களில் வாகனம் பயணிக்கலாம். எக்ஸ்பிரஸ்வே 7 என்றழைக்கப்படும் இந்த திட்டத்துக்கு ரூ.17,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாசுபாடு காரணமாக நீண்டநாட்களாக தாமதமாகி வந்த துவாரகா எக்ஸ்பிரஸ்வே இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது. இந்தியாவின் முதல் உயர்தள அர்பன் ஹைவேயான இந்த தடம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும். டெல்லியில் உள்ள துவாரகாவை ஹரியானாவில் உள்ள குருகிராமை இந்த எக்ஸ்பிரஸ் வே இணைக்கிறது.
டெல்லி, அமிர்தசரஸ் இடையே சாலைப்போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்படுகிறது. நான்கு மணிநேரத்தில் டெல்லியிலிருந்து அமிர்தசரஸுக்குச் சென்று விடலாம். அமிர்தசரஸில் உள்ள தங்கக்கோயில், தரண் தரணில் உள்ள குருத்வாரா தர்பார் சாகிப், காத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலை இதன் மூலம் இணைக்கின்றனர்.
டெல்லி- டேராடூன் எக்ஸ்பிரஸ் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. போக்குவரத்துக்காக விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜாஜி தேசியப் பூங்கா நடுவில் இந்த தடம் அமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியை கடப்பதற்கு உயர்தளம் மற்றும் 340 மீட்டர் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிக நீளமான உயர்தள காட்டுப்பாதை இது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications