டெல்லி: கடந்த வாரத்தில் சந்தை மதிப்பில் சிறந்த 10 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 91,699 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
இவ்வாறு சந்தை மதிப்பு சரிந்த நிறுவனங்களில் மிகப்பெரிய இழப்பு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு தான். ஆக இழப்பு பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டாப் லெவலில் உள்ளது. இதையடுத்து இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு குறைந்துள்ளது.

எனினும் டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், கோடக் மகேந்திரா, மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தை மூலதனங்கள் சற்று அதிகரித்துள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 60,829.21 கோடி ரூபாய் குறைந்து, 12,23,416.97 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே ஹெச்டிஎஃப்சியின் சந்தை மூலதனம் 13,,703.75 கோடி ரூபாய் குறைந்து, 4,05,996.11 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பானது 11,020.23 கோடி ரூபாய் குறைந்து, 2,52,755.97 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 5,090.54 கோடி ரூபாய் குறைந்து, 3,26,225.04 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 1,055.27 கோடி ரூபாய் குறைந்து, 4,68,779.17 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி 20,482.86 கோடி ரூபாய் அதிகரித்து, 7,93,336.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே பஜாஜ் பைனான்ஸின் சந்தை மதிப்பானது 11,181.01 கோடி ரூபாய் அதிகரித்து, 2,95,466.65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 7,335.91 கோடி ரூபாய் அதிகரித்து, 10,05,320.15 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஹெச்யுஎல் சந்தை மதிப்பானது 4,132.22 கோடி ரூபாய் அதிகரித்து, 5,02,147.16 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கோட்டக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பு 2,538.64 கோடி ரூபாய் அதிகரித்து, 3,76,485.84 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தின் சென்செக்ஸ் 267.47 புள்ளிகள் அல்லது 0.60% ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications