இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருதுகள் கருதப்படுகின்றன. பல்வேறு துறைகளிலும் சிறந்து செயல்படும் நபர்களை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பாக பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெளி உலக புகழ் கிடைக்காமல் இருக்கும் UNSUNG HEROக்கள் பலருக்கும் பத்ம விருதுகள் பெரிய அடையாளமாக இருக்கின்றன. பத்ம விருதுகள் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டுமே குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது உண்டு.

கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு, சமூக பணி என பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்தவர்களை பாராட்டும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்குகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுகள் அறிவிக்கப்படும். பின்னர் குடியரசு தலைவர் மாளிகையில் நிகழ்ச்சி நடத்தப்படும்.
பத்ம விருதுகள் என்பது பெரிய கௌரவம். குடியரசு தலைவரின் கையில் குடியரசு தலைவர் கையெழுத்திட்ட சான்றிதழ் கிடைக்கும். இது தேசிய அளவில் பெரிய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி தரும். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் பத்ம விருதுகளை பெற உள்ளனர்.

குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த கால்நடை ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல திருவாரூரை சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவச்சலத்திற்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சிலம்பக் கலைஞர் பழனிவேல், சேலத்தை சேர்ந்த சிற்பி காளியப்ப கவுண்டர், ஓவியர் ஆர். கிருஷ்ணன், ஓதுவார் சுவாமிநாதன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம ஸ்ரீ விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைஞர்களுக்கு டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறக்கூடிய விழாவில் குடியரசுத் தலைவரால் விருதுகள் வழங்கப்படும். வழக்கமாக பத்மஸ்ரீ விருதுகளுக்கு தகுதியானவர்களை பொதுமக்களே இணையதளம் வாயிலாக அரசுக்கு பரிந்துரை செய்யலாம். பிரதமர் சார்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
கேரளாவில் தபோவனம் என்ற வனத்தையே உருவாக்கி சுற்றுச்சூழலுக்காக பாடுபடும் 92 வயதான தேவகி அம்மாள் பத்ம ஸ்ரீ விருது பெற உள்ளார். சுமார் 20 லட்சம் புத்தகங்களை கொண்டு கர்நாடகாவில் மிகப்பெரிய நூலகத்தை நடத்தி வ்ரும் அங்கே கவுடா, மேகாலயாவில் மரத்தின் வேர்களை கொண்டு பாலங்களை உருவாக்கிய 70 வயது விவசாயி ஹல்லி வார் உள்ளிட்டோரும் இந்த ஆண்டு விருது பெற உள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications