பிக்ஸட் டெபாசிட் செய்ய் திட்டமா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எங்கு அதிக வட்டி..!

பரவி வரும் கொரோனாவினால் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகள் கடன் வாங்கும் விலையை குறிக்கும் ரெப்போ விகிதம் குறைவாக உள்ள நிலையில், பிக்ஸட் டெபாசிட்களின் விகிதங்களும் குறைவாகவே இருந்து வருகின்றன.

என்னதான் வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்திலும் சிறந்த முதலீடாக பார்க்கப்படுவது, வங்கி வைப்பு நிதி தான். சரி இந்தியாவில் டாப் வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம், எங்கு அதிகம் வாருங்கள் பார்க்கலாம்.

லிஸ்டில் என்னென்ன வங்கிகள்?

லிஸ்டில் என்னென்ன வங்கிகள்?

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐடிஎஃப்சி வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் என்னென்ன வட்டி விகிதம்? என்று தான் பார்க்க போகிறோம். இந்த வங்கிகளில் 2 கோடி ரூபாய்க்கு கீழான பிக்ஸட் டெபாசிட்களுக்கு, அக்டோபர் 2020ல் வட்டி விகிதத்தினை தான் பார்க்க இருக்கிறோம்.

எஸ்பிஐ & ஐசிஐசிஐ வங்கி

எஸ்பிஐ & ஐசிஐசிஐ வங்கி

எஸ்பிஐ-யில் பொது மக்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 2.90% முதல் 5.40% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 3.40% முதல் 6.20% வரை வழங்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கியில் பொது மக்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 2.50% முதல் 5.50% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 3% முதல் 6.30% வரை வழங்கப்படுகிறது.

 

பஞ்சாப் நேஷனல் வங்கி & ஹெச்டிஎஃப்சி வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி & ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கியில் பொது மக்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 2.50% முதல் 5.50% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 3% முதல் 6.25% வரை வழங்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பொது மக்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 3.00% முதல் 5.30% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 3.75% முதல் 6.05% வரை வழங்கப்படுகிறது.

 

ஆக்ஸிஸ் வங்கி & கனரா வங்கி

ஆக்ஸிஸ் வங்கி & கனரா வங்கி

கனரா வங்கியில் பொது மக்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 3.00% முதல் 5.30% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 3.00% முதல் 5.80% வரை வழங்கப்படுகிறது.

ஆக்ஸிஸ் வங்கியில் பொது மக்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 2.50% முதல் 5.30% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 3.00% முதல் 5.80% வரை வழங்கப்படுகிறது.

 

ஐடிஎஃப்சி வங்கி & பேங்க் ஆப் பரோடா

ஐடிஎஃப்சி வங்கி & பேங்க் ஆப் பரோடா

பேங்க் ஆப் பரோடாவில் பொது மக்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 2.90% முதல் 5.30% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 3.40% முதல் 6.30% வரை வழங்கப்படுகிறது.

ஐடிஎஃப்சி வங்கியில் பொது மக்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 3.00% முதல் 7.00% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 4.00% முதல் 7.50% வரை வழங்கப்படுகிறது.

 

கார்ப்பரேஷன் பேங்க் & பேங்க் ஆஃப் இந்தியா

கார்ப்பரேஷன் பேங்க் & பேங்க் ஆஃப் இந்தியா

பேங்க் ஆஃப் இந்தியாவில் பொது மக்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 3.25% முதல் 5.25% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 3.75% முதல் 5.75% வரை வழங்கப்படுகிறது.

கார்ப்பரேஷன் பேங்கில் பொது மக்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 3.50% முதல் 5.45% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 4.00% முதல் 5.95% வரை வழங்கப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+