FD-களைப் பற்றிய புதிய அப்டேட் வந்தாச்சு!! ஒவ்வொரு மாதமும் எந்தெந்த வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைக்க இருக்கின்றன என்று தேடும் முதலீட்டாளர்கள் பல பேர். பிக்சட் டெபாசிட்களுக்கு ஏன் நம் ஊரில் அவ்வளவு பிரியம் என்றால் இதில் போடும் அசலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். அதேபோல கணிசமான வட்டியும் கிடைப்பதனால், பல முதலீட்டாளர்களின் விருப்ப தேர்வு FD-கள் தான். அதிலும் ஒவ்வொரு மாதமும் FD வட்டி விகிதங்களில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா? தங்களுடைய வங்கியில் கொடுக்கப்படும் FD-களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறதா? என்று தேடும் நபர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.
சமீபத்தில், முன்னணி பொது துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் புதிய FD திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அதில் சில வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. SBI பேங்க், HDFC பேங்க், ICICI பேங்க், PNB பேங்க், பேங்க் ஆப் இந்தியா, ஃபெடரல் பேங்க் மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா என 7 முன்னணி வங்கிகள் வழங்கும் FD விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI): ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா "SBI Amrit Vrishti" என்ற புதிய சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், பொது வாடிக்கையாளர்கள் 444 நாட்களுக்கு 7.25 % வட்டி விகிதத்தைப் பெறலாம். மூத்த குடிமக்கள் அதே 444 நாட்களுக்கு 7.75 % வட்டி விகிதத்தில் பயனடையலாம். இந்தத் திட்டத்தில் ஜூலை 15, 2024 முதல் மார்ச் 31, 2025 வரை முதலீடு செய்யலாம்.
SBI FD திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 3.50 % முதல் 7.00 % வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு பொருந்தும். இந்த விகிதங்கள் ஜூன் 15 முதல் கிடைக்கும். மூத்த குடிமக்கள் இந்த விகிதங்களில் அனைத்து டெபாசிட் காலங்களுக்கும் கூடுதலாக 0.50 % வட்டியைப் பெறலாம்.
HDFC பேங்க்: HDFC பேங்க் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 3% முதல் 7.4 % வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. 7.4 % அதிகபட்ச விகிதம் பொது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. மூத்த குடிமக்கள் 7.90 % வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூலை 24, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ICICI பேங்க்: ICICI பேங்க் 3 % முதல் 7.20 % வரையிலான வட்டியை பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது, இது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு காலகட்டங்களுக்கான FD திட்டங்களுக்குப் பொருந்தும். இந்த விகிதங்கள் ஜூலை 30, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB): ஆகஸ்ட் 1, 2024 முதல், பஞ்சாப் நேஷனல் பேங்க் 400 நாட்களுக்கான FD திட்டத்தில் 7.25 % வட்டி வழங்குகிறது. 300 நாள் FD திட்டங்களுக்கு 7.05 % வட்டி வழங்குகிறது.
1 வருடம் மற்றும் 2 வருட FD-களுக்கு, 6.80% வட்டி வழங்கப்படுகிறது. 3 வருட FD-களுக்கு 7.00% வட்டி வழங்குகிறது. அதேசமயம் 4 வருடம் மற்றும் 5 வருட FD-களுக்கு 6.50 % வட்டி வழங்கப்படுகிறது.
7 முதல் 45 நாட்களுக்கு ஆண்டுக்கு 3.50%, 46 முதல் 179 நாட்களுக்கு 4.50 %, 180 முதல் 270 நாட்களுக்கு 6.25% மற்றும் 271 முதல் 299 நாட்களுக்கு 6.50 % வட்டி வழங்குகிறது. 301 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான FD-களுக்கு 6.50% வட்டி வழங்கப்படுகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா: ஆகஸ்ட் 1, 2024 முதல், பேங்க் ஆஃப் இந்தியா ரூ.3 கோடிக்கும் குறைவான மற்றும் ரூ.3 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான FD டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை புதுப்பித்துள்ளது.
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட் காலங்களுக்கு 3% முதல் 6% வரை வட்டி வழங்கப்படுகிறது. 666 நாட்களைக் கொண்ட ரூ. 3 கோடிக்குக் கீழ் உள்ள டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக 7.30% வட்டி வழங்கப்படுகிறது.
ஃபெடரல் பேங்க்: பொது வாடிக்கையாளர்களுக்கு 7.4% வரை FD திட்டங்களுக்கு வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு, FD விகிதங்கள் 3.5% முதல் 7.9% வரை இருக்கும். இந்த புதிய FD விகிதங்கள் ஆகஸ்ட் 2, 2024 முதல் அமலுக்கு வருகின்றன.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பொது வாடிக்கையாளர்களுக்கு FD-களில் 7.4% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. FD விகிதங்கள் ஆகஸ்ட் 2, 2024 முதல் அமலுக்கு வருகின்றன.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications