இந்தியாவின் முன்னணி பட்ஜெட் விமான சேவை நிறுவனமான Go First திவாலாக அறிவித்த நிலையில், இதற்கான தீர்வு காணப்படாத நிலையில் கோ பர்ஸ்ட் அனைத்து விமானங்களையும் மே 12 வரையில் நிறுத்திவைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் அரசு தரப்பில் விமான டிக்கெட் புக் செய்தவர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பி கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் Go First விமானங்களின் இயங்கி வந்த வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்துள்ளது சக போட்டி விமான நிறுவனங்கள். விமான சேவை நிறுவனங்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கூடுதல் வருமானத்தை பார்க்க திட்டமிட்டு உள்ளதால் கட்டணங்களை தடாலடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய விமான போக்குவரத்து நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் அடித்த மாதங்களுக்கு உள்நாட்டு விமான கட்டணங்களில் இந்த உயர்வு தொடரும் என்று கணித்துள்ளனர். இந்திய விமான போக்குவரத்து சந்தையில் கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் பங்கீடு 6.9 சதவீதமாக இருந்தது.
இண்டிகோ மற்றும் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா, ஏர் ஏசியா மற்றும் விஸ்தாராவுக்குப் பின் கோ பர்ஸ்ட் இந்திய விமான போக்குவரத்து சந்தையில் வர்த்தக பங்கீட்டை கொண்டு உள்ளது. இதேவேளையில் Go First நிறுவனத்தின் வர்த்தக இடத்தை நிரப்ப ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மத்திய அரசிடம் 400 கோடி ரூபாய் கடனை பெற்று இந்நிறுவனம் தரையிறக்கப்பட்ட 25 விமானங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
கோ ஃபர்ஸ்ட் சுமார் 53 விமானங்களை கொண்டு இந்தியாவில் சுமார் 34 இடங்களுக்கு போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. இதோடு தினமும் சராசரியாக 200 க்கும் மேற்பட்ட விமான பயணங்களை கோ பர்ஸ்ட் மேற்கொண்டு வருகிறது. 200-க்கும் மேற்பட்ட தினசரி விமானங்கள் 10 நாட்களுக்கு நிறுத்தப்பட்டதால் கோ ஃபர்ஸ்ட் வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இந்த நிலையில் மே 3 ஆம் தேதிக்கான டெல்லி முதல் மும்பை வரையிலான விமானக் கட்டணம் 37 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. பல வழித்தடங்களில் விமான கட்டணம் 4-6 மடங்கு உயர்ந்துள்ளது.

மே 5 கட்டண தரவுகளின்படி, டெல்லி - லே வழித்தடத்தின் வழக்கமான கட்டணம் ரூ.4,772 உடன் ஒப்பிடும்போது, தற்போது ரூ.26,819 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், சண்டிகர் - ஸ்ரீநகரில் பயணிக்கும் பயணிகள் தங்கள் கட்டணம் ரூ.24,418 ஆக உயர்ந்துள்ளது, இது வழக்கமான விலையான ரூ.4,047 லிருந்து பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
மேலும், ஸ்ரீநகர்-சண்டிகர் வழித்தடத்தில் மே 6ஆம் தேதிக்கான விமானக் கட்டணம் ரூ.26,148 ஆக உயர்ந்துள்ளது, இது நிலையான கட்டணம் ரூ.4,745 ஆக இருந்தது. இந்த விலை உயர்வு கோடை விடுமுறை காரணமாகவும் அதிகரித்துள்ளது. இதேபோல் கோ பர்ஸ்ட் விமான சேவை முடக்கத்தாலும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications