இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது சப்ளை செயின் கட்டமைப்பை மேம்படுத்தவும், வலிமைப்படுத்தவும் இந்தியப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர உள்ளது.
பல புதிய துறைகளில் வர்த்தகத்தைத் துவங்கியும், விரிவாக்கம் செய்து வரும் அதானி குழுமம், தற்போது நாட்டின் 2வது மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் உடன் கூட்டணி வைத்துள்ளது.
பிளிப்கார்ட் வர்த்தக விரிவாக்கம்
பிளிப்கார்ட் தற்போது அமேசான் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் போட்டிப்போடும் வகையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது மட்டுமல்லாமல் பல புதிய பிரிவுகளிலும் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள்
இதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை இனி வரும் காலத்தில் பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிதாகத் தளத்திற்குள் வரும் வாடிக்கையாளர்களுக்கும், பழைய வாடிக்கையாளர்களுக்கும் மேம்பட்ட சேவையை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
சப்ளை செயின் கட்டமைப்பு
இந்நிலையில் பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவாகப் பொருட்களை டெலிவரி செய்வது மட்டும் அல்லாமல் அனைத்து விதமான பொருட்களையும் விநியோகம் செய்யும் வகையில் தனது சப்ளை செயின் வர்த்தகத்தை மேம்படுத்த உள்ளது. இதற்காகவே பிளிப்கார்ட் தற்போது அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
மாபெரும் கிடங்கு - fulfilment centre
இந்தப் புதிய கூட்டணி மூலம் அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், தற்போது மும்பையில் கட்டப்பட்டு வரும் 5,34,000 சதுரடி கொண்ட மாபெரும் fulfilment centre-ஐ பிளிப்கார்ட் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விட உள்ளது.
பிளிப்கார்ட்-க்கு லாபம்
இப்புதிய fulfilment centre மூலம் பிளிப்கார்ட் தனது மேற்கு இந்திய பகுதிகளில் இருக்கும் கோடிக்கணக்கான விற்பனையாளர்கள் மற்றும் MSME நிறுவனங்களை இதன் மூலம் இணைக்க முடியும். இதனால் பிளிப்கார்ட் தளத்தில் புதியதாகப் பல பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருவது மட்டும் அல்லாமல் பலதரப்பட்ட வர்த்தகத்தை மேம்படுத்த முடியும்.
1 கோடி விற்பனையாளர்கள்
அதானி லாஜிஸ்டிக்ஸ் கட்டப்பட்டு வரும் 5,34,000 சதுரடி கொண்ட fulfilment centre 2022ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் செயல்பாட்டு வரும் நிலையில், இந்தக் கிடங்கில் சுமார் 1 கோடி விற்பனையாளர்களின் பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
சென்னையில் டேட்டா சென்டரை
சமீபத்தில் பிளிப்கார்ட் தனது 3வது டேட்டா சென்டரை அதானிகானெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வாயிலாகச் சென்னையில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டேட்டா சென்டர் தொடர்ந்து தற்போது லாஜிஸ்டிக்ஸ் 2வது பிரிவில் பிளிப்கார்ட் அதானி குழுமத்துடன் கூட்டணி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications