இந்தியாவின் இ-காமர்ஸ் தளங்கள் தீபாவளி பண்டிகை காலத்தில் வரலாற்று உச்ச விற்பனையைப் பதிவு செய்துள்ளன. எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் மொத்த ஈகாமர்ஸ் விற்பனை ரூ. 1 லட்சம் கோடியை ($11.9 பில்லியன்) தாண்டியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 23% அதிகரித்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இந்திய மக்கள் மத்தியில் அதிகரித்த நுகர்வோர் செலவு மற்றும் சிறு நகரங்களில் இருந்து தேவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

தீபாவளி பண்டிகையின் போது சென்னை டிநகரில் மக்கள் கூட்டம் கடந்த 20 வருடத்தில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியது, ஈகாமர்ஸ் துறை வர்த்தகத்தைப் பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது.
அக்டோபர் மாதம் துவங்கிய பண்டிகை கால விற்பனையில், முதல் வாரத்தில், ஃப்ளிப்கார்ட்டின் 'Big Billion Days’ மற்றும் அமேசானின் 'Great Indian Festival’ போன்ற பெரிய விற்பனை சலுகை மூலம் மொத்த விற்பனையில் பாதிக்கும் மேல், அதாவது ரூ. 55,000 கோடி ($6.5 பில்லியன்) விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த அக்டோபர் மாத விற்பனையில் இரண்டு முக்கிய ஈகாமர்ஸ் தளங்களாக பிளிப்கார்ட், அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன்கள் தான் முதன்மையான விற்பனைப் பிரிவாக இருந்துள்ளது. இந்த அக்டோபர் காலகட்டத்தில் நாட்டில் நடைபெற்ற மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் கிட்டத்தட்ட 65% ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இரண்டும் ஸ்மார்ட்போன் விற்பனையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில், 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களின் விற்பனை பங்கீடு சுமார் 70% க்கும் அதிகமாக உள்ளது என தெரிகிறது.
மளிகைப் பொருட்கள், அழகு மற்றும் பர்சனல் கேர் பொருட்கள், வீடு மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட பிற பிரிவுகளிலும் அதிகப்படியான பொருட்கள் விற்பனையாகியுள்ளது. இ-காமர்ஸ் தளங்கள் சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் ஆன்லைன் ஷாப்பிங்கின் வளர்ந்து வரும் போக்கை இந்த தீபாவளி ஷாப்பி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
நாடு முழுவதும் சிறு நகரங்களில் மேம்படுத்தப்பட்ட இணைய இணைப்பு, ஆன்லைன் பணம் செலுத்தும் முறை ஆகியவை எளிதாகிய காரணத்தால் இ-காமர்ஸ் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications