வால்மார்ட் பின்னணியில் உள்ள பிளிப்கார்ட் நிறுவனம், போன்பே நிறுவனங்களின் முழுமையான உரிமை பிரிவினையை நிறைவு செய்துள்ளன. பேமெண்ட்ஸ் மற்றும் நிதி சேவை வழங்கி வரும் யூனிகார்ன் நிறுவனமான போன்பே, மிகப்பெரிய நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய மதிப்புமிக்க ஃபின்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமாக போன்பே இருக்கும்.
ஏன் தனி தனியாக பிரித்தல்?
இந்த வணிகங்களை தனித் தனி நிறுவனங்களாக அமைப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த நிறுவனத்தின் மீதான மதிப்பினையும் அதிகரிக்கும். இதன் திறனையும் அதிகரிக்க உதவும் என இரு நிறுவனங்களும் இணைந்து ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்த பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட் சிங்கப்பூர் மற்றும் போன்பே சிங்கப்பூர் பங்குதாரர்கள் நேரடியாக போன்பே இந்தியாவில் பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்திய நிறுவனமாக மாற நடவடிக்கை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த செயல்முறையானது, போன்பே நிறுவனம் முழுமையாக இந்திய நிறுவனமாக மாறுவதற்கான நடவடிக்கையையும் இது நிறைவு செய்கிறது.
கடந்த அக்டோபரில், போன்பே நிறுவனம் தனது பதிவு செய்யப்பட்ட தலைமையகத்தினை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் செயல்முறையை தொடங்கியது.
ஏன்? பல கேள்விகள்
போன்பே-வின் இந்த நடவடிக்கையானது இந்தியாவில் தனது பங்கு வெளியீட்டினை செய்வதற்கு முன்னதாக, பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பொதுவாக இந்திய நிறுவனங்கள் வரி சலுகைகாக, வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், புதிய முதலீடுகளை பெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர்-க்கு செல்லும். ஆனால் போன்பே அப்படியே தலைகீழாகச் செயல்பட்டு உள்ளதால் இது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
செயல்பாடுகள் எப்போது?
கடந்த ஜூன் மாதமே போன்பே நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சமீர் நிகாம், போன்பே நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து அதன் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தை இந்தியாவுக்கு மாற்றுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த திட்டத்திற்கு ஆதரவாக நிறுவன வாரியமும் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். எனினும் இதற்காக செயல்முறை முடிவடைய இன்னும் சிறிது காலம் காலம் ஆகலாம் என்றும் அந்த சமயத்தில் கூறியிருந்தார்.
மேட் இன் இந்தியா நிறுவனம்
நாங்கள் ஒரு மேட் இன் இந்தியா நிறுவனம். எங்களின் ஒவ்வொரு அலுவலகமும், டேட்டா சென்டர், ஊழியர்கள் என அனைவரும் இங்கு தான் உள்ளனர். இது நாங்கள் இந்த சந்தையில் பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டது அல்ல என கூறினார்.
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனையில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனம், 400 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யபப்ட்ட பயனர்களை பின்டெக் நிறுவனம் கொண்டுள்ளது.
சந்தை பங்கு
மாதாந்திர சந்தை பங்கினில் 47% பங்கினை போன்பே யுபிஐ கொண்டுள்ளது. இதற்கிடையில் நாங்கள் அடுத்தகட்ட வணிக நகர்வான இன்சூரன்ஸ், சொத்து மேலாண்மை, கடன் சேவை என பலவற்றிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இது பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கடன் சேவை அளிக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரிவு நிறைவு கட்டம்
போன்பே நிறுவனம் கடந்த 2016ல் பிளிப்கார்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. எனினும் பிளிப்கார்ட் நிறுவனம் 2020ல் தனி ஒரு நிறுவனமான தன்னை விலக்கிக் கொண்டது. போன்பே அதன் பின் 5.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் வால்மார்ட் உட்பட பல முதலீட்டாளர்களிடமிருந்து 700 மில்லியன் டாலர்கள் நிதியினை திரட்டியது.போன்பேயில் இன்றும் வால்மார்ட் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது.
கட்டணம் விதிக்க போகிறதா?
தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே தனது நிதி சேவையினை விரிவாக்கம் செய்து வரும் நிறுவனம், பல்வேறு வணிகங்களில் தனது கவனத்தை செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 700 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரையில் நிதி திரட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.
இதற்கிடையில் அதன் வருவாயினை அதிகரிக்க போன்பே நிறுவனம் அதன் கியூஆர் ஸ்கேன் சேவைக்கும், யுபிஐ சேவைக்கும் கட்டணம் விதிக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications