இந்தியாவில் ஈகாமர்ஸ் தளங்களில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் திடீரென தனது கிளை நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு கையகப்படுத்திய ஏஎன்எஸ் காமர்ஸ் (ANS Commerce) நிறுவனத்தை மூடுவதாக பிளிப்கார்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 200க்கும் அதிகமானவர்கள் வேலை இழக்க உள்ளனர். வரும் 31ஆம் தேதிக்கு பின்னர் இந்த நிறுவனம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஈ-காமர்ஸ் சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2017ஆம் ஆண்டு ஏஎன்எஸ் காமர்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. தங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தல், கிடங்கு ஏற்படுத்தி தருவது, ஈகாமர்ஸ் செயல்பாடுகளை கவனித்து கொள்வது என்பன உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்த ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனம் வழங்கி வந்தது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மட்டுமில்லாமல் மற்ற டிஜிட்டல் முறைகளிலும் பொருட்களை விற்பனை செய்ய தேவையான உதவியை வழங்கியது.
2022 ஆம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. ஆனால் மூன்று ஆண்டுகளிலேயே பிளிப்கார்ட் நிறுவனம் அதனை மூட முடிவு செய்துள்ளது. இதற்கான தெளிவான காரணங்களை வெளியிடவில்லை. இருந்தாலும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தால் லாபகரமானதாக செயல்பட முடியவில்லை என்றும் இதன் காரணமாகவும் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற காரணமாகவுமே பிளிப்கார்ட் இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 200க்கும் அதிகமான ஊழியர்களும் தற்போது வேலையை இழந்துள்ளனர். இது தங்களுக்கு பேதிர்ச்சியை தருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய லிங்குடின் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவன ஊழியர்கள், ஒரே ஒரு அறிவிப்பு தங்களுடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது என வேதனை தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் பிளிப்கார்ட் நிறுவனம் இவர்கள் அனைவரையும் நல்ல ஒரு நிதி தொகுப்புடன் நான் வேலையை விட்டு அனுப்புவோம் என்ற உறுதியை தந்துள்ளது. தங்கள் நிறுவனத்திற்கு உள்ளே இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர முடியுமா என முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளது.
நேரடியாக வாடிக்கையாளர்களிடம் தங்களுடைய பிராண்டுகளை கொண்டு சேர்த்து விற்பனை செய்ய வேண்டும் என விரும்பிய நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது ஏஎன்எஸ் நிறுவனம். திடீரென இந்த நிறுவனம் மூடப்படுவது இந்த துறை சார்ந்த இயங்கும் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது SaaS பிரிவில் ஈகாமர்ஸ் சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு எதிர்காலம் இருக்குமா என்ற வினா எழுகிறது.
Story Written:Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications