இந்தப் பணிநீக்க காலத்தில் நிறுவனங்கள் எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் திக் திக் மொமண்ட் ஆக உள்ளது, அமெரிக்க டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் வேளையில் பிளிப்கார்ட் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது,
இந்தியாவின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் இந்த வருடம் தனது சம்பள உயர்வை 70 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பணிநீக்கங்கள் மத்தியில் இத்தகைய அறிவிப்பு மூலம் நிறுவனங்கள் பாதிப்பை குறைத்தாலும், இதன் மூலம் பாதிக்கப்படும் ஊழியர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும்.
பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்தக் 'கடினமான முடிவு' நிறுவனத்தின் 4,500 ஊழியர்களைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் ஊழியர்களுக்கு நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில், கிரேடு 10-க்கு மேல் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு இந்த வருடம் எவ்விதமான சம்பள உயர்வுகளும் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.
ஈகாமர்ஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட், பணிநீக்கம் அறிவிக்காதது பெரும் நம்மதி அளித்தாலும் சம்பள குறைப்பை அதிகளவிலான ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இந்தச் சம்பள குறைப்பு என்பது உயர் அதிகாரிகளுக்கு மட்டும் என்பதால் அதிகப்படியான ஊழியர்களுக்குப் பெரும் நம்மதி அளித்துள்ளது.
கிரேடு 10
பிளிப்கார்ட் நிறுவனத்தின் அறிவிப்பு படி கிரேடு 10 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மேலாளர்கள் முதல் துணைத் தலைவர்கள் வரை பலதரப்பட்ட பதவிகளில் உள்ளவர்கள். இவர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வை கட் செய்திருந்தாலும் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் திட்டமிட்டபடி போனஸ் மற்றும் பங்கு கொடுப்பனவுகளை வெளியிடும் என அறிவித்துள்ளது.
70% ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு
குறிப்பிடத்தக்க வகையில், பிளிப்கார்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான வருடாந்தர அப்ரைசல்கள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் 70 சதவீத ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் 1 முதல் சம்பள உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளிப்கார்ட் விளக்கம்
பிளிப்கார்ட் நிறுவனத்தில் நாங்கள் எப்போதும் பணியாளர் மற்றும் நிறுவன முன்னுரிமைகளைச் சமநிலைப்படுத்த முயற்சிப்போம், எங்கள் செயல்கள் அனைத்து ஊழியர் எது சரியானது என்பதன் அடிப்படையில் இயக்கப்படுகிறது. தற்போதைய மேக்ரோ பொருளாதாரச் சூழ்நிலையில், எங்கள் ஊழியர்களின் அதிகப்படியான நலன் மனதில் வைத்து, எங்கள் நிதி ஆதாரங்களை நிர்வகிப்பதில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.


Click it and Unblock the Notifications