இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான் நிறுவனத்திற்கு கடுமையான போட்டியை கொடுக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் கொரோனா லாக்டவுன்-க்கு பின் தனது 90 சதவீத விற்பனையாளர்கள் திரும்பவும் விற்பனை செய்ய வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலமான ஏப்ரல் - ஜூன் மாதத்தில் பிளிப்கார்ட்-ல் தங்களது பொருட்களை விற்பனை செய்ய பதிவு செய்துள்ள புதிய விற்பனையாளர்கள் எண்ணிக்கை சுமார் 125 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பிற்கு பின் ஈகாமர்ஸ் சந்தை அதிகளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது.
பிளிப்கார்ட்
கொரோனா தொற்றின் காரணமாக விற்பனையாளர்களும் சரி, வாடிக்கையாளர்கள் அதிகளவில் வெளியில் செல்ல முடியாமல் இருக்கும் காரணத்தால், தற்போது பிளிப்கார்ட் எப்போதும் இல்லாத வகையில் அதிகளலவிலான விற்பனையாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், மற்றும் கலைஞர்களின் பொருட்களை எங்களது தளத்தில் மூலம் விற்பனை செய்ய வழி அமைத்து, பொருட்களை பாதுகாப்பான முறையில் வாடிக்கையாளர்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்து வருகிறோம் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
வாய்ப்பு
பிளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனையாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், மற்றும் கலைஞர்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் பொருட்களை நாடு முழுவதிலும் இருக்கும் மக்களுக்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
கொரோனா
கொரோனா இந்திய ரீடைல் சந்தைக்கு புதிய பாடம் புகட்டியுள்ளது, அனைத்து கடைகளும் மூடியுள்ள நிலையில் விற்பனையாளர்கள் வர்த்தகத்திற்காக புதிய வழியை தேடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருக்கும் MSME நிறுவனங்களுக்கு ஈகாமர்ஸ்-ன் அருமையையும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களையும் எடுத்து காட்டியுள்ளது.
முக்கிய மாநிலம்
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து தான் இந்த ஏப்ரல் - ஜூன் மாதத்தில் பிளிப்கார்ட்-ல் அதிகளவிலான MSME நிறுவனங்கள் பிளிப்கார்ட் தளத்தில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மொத்த விற்பனையாளர்கள்
இன்றைய நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் 2 லட்சம் விற்பனையாளர்களும், 2.5 லட்சம் சிறுவிற்பனையாளர்கள் (கலைஞர்கள், சிலைவடிப்பாளர்கள், நெசவாளர்கள்) உள்ளதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications