Flipkart Big Billion Day sale: 80% வரை தள்ளுபடியில் ஆறு நாள் ஆன்லைன் விற்பனை!

இந்தியாவில் தீபாவளி, தசரா நவராத்திரி போன்ற பண்டிகைகள் எல்லாம், கிட்டத்தட்ட இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்படும் பண்டிகைகள்.

இந்த பண்டிகை காலங்களில் பொதுவாகவே, வியாபாரம் அதிகரிக்கும். இந்த நேரம் பார்த்து, இ காமர்ஸ் கம்பெனிகளும் தங்கள் வியாபாரத்தை அதிகரித்துக் கொள்ள சிறப்புச் சலுகைகளை எல்லாம் கொடுத்து வியாபாரம் செய்யத் தொடங்குவார்கள்.

ஒரு காலத்தில் இந்திய நிறுவனமாக இருந்து, தற்போது அமெரிக்க நிறுவனமாக மாறி இருக்கும் ஃப்ளிப்கார்ட், தற்போது தன் பிக் பில்லியன் டே சிறப்பு வியாபாரத்தை அறிவித்து இருக்கிறது.

6 நாள் அசத்தல் வியாபாரம்

6 நாள் அசத்தல் வியாபாரம்

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டே (Flipkart Big Billion Day) விற்பனை, அக்டோபர் மாதத்தில் 6-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை, ஆறு நாட்கள் நடைபெற இருக்கிறது. ஃப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்கள், அக்டோபர் 15-ம் தேதியில் இருந்தே பிக் பில்லியன் டே சலுகையில் ஆர்டர்களைப் போடத் தொடங்கலாம்.

அள்ளித் தெளிக்கும் தள்ளுபடிகள்

அள்ளித் தெளிக்கும் தள்ளுபடிகள்

ஃப்ளிப்கார்ட்டின் இந்த பிக் பில்லியன் டே விற்பனையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட்களைப் பயன்படுத்தி ஆர்டர் செய்பவர்களுக்கு உடனடியாக 10 சதவிகிதம் தள்ளுபடி வேறு கொடுக்கிறார்களாம். அது போக, பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் உதவி உடன், வாடிக்கையாளர்களுக்கு நோ காஸ்ட் இ எம் ஐ வசதியும் கொடுக்கிறார்களாம்.

கேஷ் பேக் இருக்கு

கேஷ் பேக் இருக்கு

ஃப்ளிப்கார்ட் கம்பெனி, இந்தியாவின் முன்னணி பேமெண்ட் கம்பெனிகளில் ஒன்றான பேடிஎம் நிறுவனத்துடன் சேர்ந்து சில கேஷ் பேக் சலுகைகளையும் கொடுக்க இருக்கிறார்களாம். பேடிஎம் வேலட் மற்றும் பேடிஎம் யூ பி ஐ வழியாக பேமெண்ட் செய்பவர்களுக்கு இந்த கேஷ் பேக் சலுகைகள் கிடைக்கும்.

இந்த பொருட்களுக்கு எல்லாம் தள்ளுபடி

இந்த பொருட்களுக்கு எல்லாம் தள்ளுபடி

மொபைல் போன்கள், ஸ்மார்ட்ஃபோன்கள், டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், அழகு சாதனப் பொருட்கள், ஃபர்னிச்சர், மளிகை சாமான்கள் என பலவற்றுக்கும் பிரமாதமான தள்ளுபடி கொடுக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஹெட் ஃபோன், ஸ்பீக்கர், smart wearables போன்ற பொருட்களுக்கு 80 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்க இருக்கிறார்கள் என்கிறது இந்தியா டுடே.

அமேசான் போட்டி

அமேசான் போட்டி

அமேசான் நிறுவனமும் இந்திய பண்டிகைகளை இலக்கு வைத்து, தன் சிறப்பு விற்பனையை, அடுத்த வாரத்துக்குள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆக இந்த பண்டிகை காலத்தில் எந்த பொருள், எந்த இ காமர்ஸ் வலைதளத்தில் விலை குறைவாகவும், தரமாகவும் கிடைக்கிறது என ஆராய்ந்துப் பார்த்து வாங்குங்கள்.

7 பில்லியன் டாலர்

7 பில்லியன் டாலர்

கடந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை 3.8 பில்லியன் டாலராக இருந்ததாம். இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிக்கலாம். அதாவது சுமாராக 7 பில்லியன் டாலரைத் தொடலாம் என்கிறது ரெட் சீர் (Redseer) என்கிற கம்பெனியின் மதிப்பீடுகள்.

70,000 பேருக்கு வேலை வாய்ப்புகள்

70,000 பேருக்கு வேலை வாய்ப்புகள்

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த பிக் பில்லியன் டே விற்பனையால், சுமாராக 70,000 பேருக்கு நேரடியாகவும், லட்சக் கணக்கான பேருக்கு மறைமுகமாகவும் சீசன் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனச் சொல்லி இருக்கிறது கம்பெனி தரப்பு. துவண்டு கிடக்கும் இந்திய பொருளாதாரத்துக்கு, இது கொஞ்சம் புத்துயிர் அளிப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+