இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் தீபாவளி, தசரா, நவராத்திரி பண்டிகை முடிந்தாலும், தள்ளுபடி விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் மக்கள் கடந்த 2-3 மாதங்களாக ஷாப்பிங் மோகத்திலேயே உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தான் பிளாக் ஃபிரைடே விற்பனை மோகமாக நடந்த நிலையில், தற்போது வருடத்தின் இறுதி மாதத்தை ஷாப்பிங் மூலம் கொண்டாடும் வகையில் பிளிப்கார்ட் சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
டிசம்பர் 5 முதல் 10 வரை நடக்கும் ஃப்ளிப்கார்ட் Buy Buy 2025 ஆண்டு இறுதி விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், வேரெபிள் உள்ளிட்ட பொருள்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி தள்ளுபடி மற்றும் பழைய போன் எக்ஸ்சேஞ்ச் சலுகையை சேர்த்தால் ஆப்பிள் மற்றும் ஒன்ப்ளஸ் ஃப்ளாக்ஷிப் போன்களை மிகக் குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பை பெறலாம்.

புதிய போன் வாங்க திட்டமிடுவோருக்கு இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை என்பது ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது.
iPhone 16 வெறும் ரூ.40,000
128 ஜிபி iPhone 16 விற்பனை விலை என்னவோ ரூ.69,900 ஆக உள்ளது. ஃப்ளிப்கார்ட் SBI கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் ரூ.4,920 உடனடி தள்ளுபடி கிடைக்கும். பழைய போனை கொடுத்தால் அதிகபட்சம் ரூ.68,050 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். உங்களுடைய பழைய போனுக்கு சாதாரணமாக ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கிடைத்தாலும் போதும் - இறுதி விலை ரூ.40,000க்கும் கீழ் வந்துவிடும். இவ்வளவு குறைந்த விலையில் iPhone 16 கிடைப்பது இதுவே முதல் முறை.
OnePlus 13 ரூ.50,000
இதோபோல் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட OnePlus 13 விற்பனை விலை ரூ.63,989 (இந்த போனின் முந்தைய விலை ரூ.72,999). ஃப்ளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கார்டு பயன்படுத்தினால் மேலும் ரூ.1,355 தள்ளுபடி. பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதிகபட்சம் ரூ.25,839 வரை போனஸ் கிடைக்கும். எல்லா சலுகைகளையும் சேர்த்தால் OnePlus 13 இறுதி விலை ரூ.50,000க்கும் கீழ் வந்துவிடும்.
இரண்டு போன்களுக்குமே எக்ஸ்சேஞ்ச் மதிப்பு உங்கள் பழைய போன் மாடல், பழைய போன் நிலை மற்றும் டெலிவரி பின் கோட் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். சேல் டிசம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது - ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications