பொதுவாக ப்ளிப்கார்ட், அமேசான், மீஷோ போன்ற இ-காமர்ஸ் தளங்களில் விற்பனை செய்யப்படும் ஒரே மாதிரியான பொருட்களுக்கு ஒரு சில ரூபாய் வித்தியாசங்கள் இருக்கும். சில நேரங்களில் அனைத்து ஆன்லைன் தளங்களிலும் ஒரே விலை தான் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் ப்ளிப்கார்ட்டில், ஒரே தயாரிப்புக்கு ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு வெவ்வேறு விலை நிர்ணயிக்கப்படுவதை கவனித்த ஒரு நபர், அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சௌரப் ஷர்மா என்ற பயனர் ஒரே மோகோபாரா கேபின் சூட்கேஸுக்கு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.4,119 ஆகவும், iOS பயனர்களுக்கு ரூ.4,799 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதை தனது X தளத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார்.

தனது X பதிவில் சௌரப் ஷர்மா, "ஆண்ட்ராய்டு Vs Ios.. பிளிப்கார்ட் அப்ளிகேஷன்களில் வெவ்வேறு விலைகள் என்று டைட்டில் கொடுத்திருந்தார். ஒரே மோகோபாரா கேபின் சூட்கேஸின் விலை பிளிப்கார்ட்டின் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனில் 4,119 ரூபாயாகவும், Ios-இன் பிளிப்கார்ட் அப்ளிகேஷனில் 4,799 ரூபாயாகவும் உள்ளது.
சப்ஸ்கிரிப்ஷன் போன்றவற்றில் ஆப்பிள் கூடுதலாக 30 சதவீத கமிஷனை வசூலிக்கிறது. எனவே ios சப்ஸ்கிரிப்ஷன்களுக்கு வெவ்வேறு விலையை நிர்ணயம் செய்வது ஏற்றுக்கொள்ளதாக தான் உள்ளது. ஆனால் இ-காமர்ஸ் தலங்களுக்கு இந்த விலை நிர்ணயம் மிகவும் நியாயமற்றது என்று எழுதியிருந்தார்
ஸ்கிரீன்ஷாட்டின்படி, மோகோபாராவின் 54 செமீ சிறிய கேபின் சூட்கேஸ் ஆண்ட்ராய்டில் 65% தள்ளுபடியுடன் ரூ.4,119-க்கு விற்கப்படுகிறது, அதேசமயம் iOS பயனர்களுக்கு 60% தள்ளுபடியுடன் ரூ.4,799-க்கு விற்கப்படுகிறது. கூடுதலாக, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மாதம் ரூ.1,373 முதல் வட்டி இல்லாத EMI விருப்பமும், iOS பயனர்களுக்கு மாதம் ரூ.1,600 முதல் EMI விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது.
சௌரப் சர்மா இன்னொரு பதிவில் பிளிப்கார்ட்டின் கஸ்டமர் சப்போர்ட்டுடன் தான் நடத்திய உரையாடலையும் பகிர்ந்திருந்தார். பெங்களூரைத் தளமாக கொண்ட பிளிப்கார்ட் நிறுவனம் விற்பனையாளர்களின் பல்வேறு காரணிகளைப் பொறுத்து விலை மாறுபடலாம். இருப்பினும் கவலைப்பட வேண்டாம்! எங்கள் விற்பனையாளர்கள் உங்களுக்கு சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்க தான் முயற்சி செய்கிறார்கள். ஹாப்பி ஷாப்பிங்! என்று கூறியிருந்தது.
அதேபோல இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நபர் ஆர்டர் செய்த அதிக விலையிலான ப்ளூடூத்துக்கு பதிலாக குறைந்த விலை Mi ப்ளூடூத் ஸ்பீக்கர்களை பெற்றுள்ளார். அந்த நபரின் நண்பர் அந்த ப்ராடக்ட்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக ஊடகத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
அவர் தனது பதிவில் ப்ளிப்கார்ட்டின் மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. எனது நண்பர் நிகில் 30,000 மதிப்புள்ள Sonos ஸ்பீக்கரை ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவர் Sonos பாக்ஸில், ரூ.2,400 மதிப்புள்ள Mi ப்ளூடூத் ஸ்பீக்கரைப் பெற்றார் என்று தனது விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். ஒரு வாடிக்கையாளரிடம் தவறான தயாரிப்பை பெற்றதற்கான தெளிவான ஆதாரம் இருந்தாலும் அவர்கள் பதிலளிக்க தவறுவது வருத்தம் அளிக்கிறது என்று பதிவிட்டிருந்தார். மேலும், Flipkart-இன் பெயரை Fraudkart என மாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications