ஆப்பிள் ஐஃபோனைப் பற்றி தெரியாதவர்கள் உண்டா..? அதே போல, ஒரு ஃபோன் வெளியாவதை ஒரு திருவிழா கணக்காக நடத்தப்படுகிறது என்றால், அது ஐஃபோன் வெளியீடுகளுக்குத் தானே.
உலகின் பாதுகாப்பான மென்பொருளைக் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களும் ஒன்று.
இதை எல்லாம் விட அத்தனை ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்குவதற்கான காரணம் அதன் தரம். டச் ஸ்கிரீன் தொடங்கி கேமரா வரை எல்லாமே ஆப்பிளின் தரம்.
ஆச்சரியம்
சரி மேட்டருக்கு வருவோம். சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் ஐஃபோன் 11 மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ விற்பனை தொடங்கியது. இந்தியாவில் ஐஃபோன் 11 ப்ரோ வாங்கிய ஒருவருக்கு புது வகையான ஐஃபோன் 11 ப்ரோவை டெலிவரி செய்து அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது ஃப்ளிப்கார்ட்.
யார் அவர்
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ரஜனி காந்த் குஷ்வா. இவர் சமீபத்தில் ஒரு 64 ஜிபி ஆப்பிள் ஐஃபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனை, ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து இருக்கிறார். ஆர்டர் செய்யும் போதே, தள்ளுபடி எல்லாம் போக, ஆப்பிள் ஐஃபோனுக்கு 93,900 ரூபாயை செலுத்திவிட்டார்.
டெலிவரி
ஃப்ளிப்கார்ட் டெலிவரி செய்த ஆப்பிள் ஐஃபோன் 11 ப்ரோவின் கேமரா ஃபோனுடன் ஒன்றி இருக்காமல் துருத்திக் கொண்டு இருந்ததை கவனித்து இருக்கிறார் ரஜனிகாந்த். கடைசியில் பார்த்தால் ஒரு டம்மி ஐஃபோனை, ஐஃபோன் 11 ப்ரோ போல காட்ட 3 கேமரா போல, ஒரு ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார்கள்.
ஐஓஎஸ்
ஃப்ளிப்கார்ட் டெலிவரி செய்த ஆப்பிள் ஐஃபோன் 11 ப்ரோவை இயக்கினால், பலத்த அதிர்ச்சி..! அது ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்திலேயே இயங்கவில்லை. அனேகமாக உலகிலேயே ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்காத முதல் ஆப்பிள் ஐஃபோன் இதுவாகத் தான் இருக்கும். இது என்னய்யா ஆப்பிளுக்கு வந்த புதிய சோதனை..!
கேமரா
ஃப்ளிப்கார்ட் டெலிவரி செய்த ஆப்பீள் ஐஃபோன் 11 ப்ரோவின் கேமரா ஃபோனுடன் ஒன்றி இருக்காமல் துருத்திக் கொண்டு இருந்ததை கவனித்து இருக்கிறார் ரஜனிகாந்த். கடைசியில் பார்த்தால் ஒரு டம்மி ஐஃபோனை, ஐஃபோன் 11 ப்ரோ போல காட்ட 3 கேமரா போல, ஒரு ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார்கள்.
ஃப்ளிப்கார்ட்
வந்த புது ரக, ஐஓஎஸ்-ல் இயங்காத ஆப்பிள் ஐஃபோன் 11 ப்ரோவைப் பற்றி விரிவாக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் கொடுத்தார். ஃப்ளிப்கார்ட் நிறுவனமும், கூடிய விரைவில் ரஜனி காந்த் குஷ்வா-க்கு புதிய ஆப்பிள் ஐஃபோன் 11 ப்ரோவை டெலிவரி செய்வதாகச் சொல்லி இருக்கிறதாம்.
ஐஃபோனிலேயேவா..?
சமீபத்தில் கூட மும்பையில் ஒரு வாடிக்கையாளர் ஃப்ளிப்கார்ட்டில் 55,000 ரூபாய் செலுத்தி, ஆப்பிள் ஐஃபோன் 8 ஸ்மார்ட்ஃபோனை ஆர்டர் செய்தார். அவருக்கு சலவை சோப்புக் கட்டிகள் டெலிவரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்னும் இப்படி ஃப்ளிப்கார்ட் எத்தனை சொதப்பல்களைச் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications