இந்தியாவின் அனைத்து முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் பெரும் நிறுவனங்கள் ஆன்லைன் பார்மசி துறைக்குள் நுழைந்து வரும் நிலையில், ஈகாமர்ஸ் துறையில் அமேசான் உடன் போட்டிப்போடும் பிளிப்கார்ட் நிறுவனமும் இத்துறைக்குள் புதிதாக நுழைந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் வர்த்தக துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய புதிய நிறுவனத்தை உருவாக்காமல் ஏற்கனவே சந்தையில் இயங்கி வரும் நிறுவனத்தை கைப்பற்ற முடிவு செய்துள்ளது.
ஆன்லைன் பார்மசி வர்த்தகம்
இந்திய டிஜிட்டல் வர்த்தக சந்தையில் ஆன்லைன் மளிகை பொருட்களுக்கு இணையாக வர்த்தக வளர்ச்சியை கொண்டு இருக்கும் ஆன்லைன் பார்மசி வர்த்தகம் தான் இன்று அதிகப்படியான மக்களின் முக்கிய இலக்காக உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ரிலையன்ஸ், டாடா, அமேசான் ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்கியது.
பிளிப்கார்ட்
இந்நிலையில் தற்போது ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தக சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் பிளிப்கார்ட் ஆன்லைன் பார்மசி நிறுவனமான சாஸ்தாசுந்தர் மார்கெட்பிளேஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை கைப்பற்றி புதிதாக ஹெல்த்கேர் வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது பிளிப்கார்ட்.
பிளிப்கார்ட் ஹெல்த்+
ஆன்லைன் பார்மசி வர்த்தகத்திற்காக பிளிப்கார்ட் ஹெல்த்+ என்ற புதிய வர்த்தக பிரிவை உருவாக்கி அதில் சாஸ்தாசுந்தர் மார்கெட்பிளேஸ் நிறுவன வர்த்தகத்தை மொத்தமாக இணைத்து இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தரமான மற்றும் மலிவான ஈபார்மசி வர்த்தகத்தை அளிக்க உள்ளது.
வர்த்தக விரிவாக்க திட்டம்
பிளிப்கார்ட் ஹெல்த்+ குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகம் மற்றும் வருவாய் அளவீட்டை பெற்ற உடன் e-diagnostics மற்றும் e-consultation சேவைகளையும் அளிக்க உள்ளதாக அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
ஜியோ நெட்மெட்ஸ் - டாடா 1MG
ஜியோ நெட்மெட்ஸ் நிறுவனத்தையும், டாடா 1MG நிறுவனத்தையும் கைப்பற்றிய பின்பு பார்மாஈசி மற்றும் மெட்லைப் தனது வர்த்தகத்தை மொத்தமாக இணைத்து பெரும் ஆதிக்கத்தை உருவாக்கியது. இதன் பின்பு அமேசான் நிறுவனமும் ஈபார்மசி வர்த்தகத்தை துவங்கியது, தற்போது இந்த வரிசையில் பிளிப்கார்ட்-ம் இணைந்துள்ளது.
அஜய் வீர் யாதவ்
பிளிப்கார்ட் ஹெல்த்+ வர்த்தகத்தை பிளிப்கார்ட் நிறுவனத்தின் உயர் துணை தலைவரான அஜய் வீர் யாதவ் தலைமையில் நிர்வாகம் செய்யப்பட உள்ளது. மேலும் பிளிப்கார்ட் சாஸ்தாசுந்தர் மார்கெட்பிளேஸ் நிறுவனத்தில் செய்யும் முதலீட்டின் அளவு குறித்து வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications