இந்தியாவில் தற்போது கடன் வழங்கும் பிரிவு வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. பாரம்பரியமாக வங்கிகளில் சென்று மக்கள் கடன் வாங்கிய நிலைமை மாறி தற்போது நிதி சார்ந்து இயங்கக்கூடிய செயலிகள் வழியாக கடன் வாங்கும் போக்கு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாகத்தான் ஸெரோதா, ஏஞ்சல் ஒன் உள்ளிட்ட பங்குச்சந்தை சார்ந்த செயலிகள் கூட கடன் வழங்கும் துறையில் கால் பதித்துள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் இ-காமர்ஸ் தளம் ஒன்று முதன்முறையாக கடன் வழங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றுள்ளது. வால்மார்ட்டுக்கு சொந்தமான flipkart நிறுவனம் இந்தியாவில் வங்கி சாராத நிதி நிறுவனமாக செயல்படுவதற்காக பிளிப்கார்ட் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறது. பிளிப்கார்ட் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்கும் ஒரு நிறுவனமாக செயல்படும் .

இதற்காக உரிமம் கோரி ரிசர்வ் வங்கியிடம் 2022ஆம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் விண்ணப்பம் செய்திருந்தது இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தான் ரிசர்வ் வங்கி பிளிப்கார்ட் பைனான்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடன் வழங்கும் நிறுவனமாக செயல்படுவதற்கான அனுமதியை தந்திருக்கிறது. இந்தியாவில் இ-காமர்ஸ் பிரிவில் செயல்படக்கூடிய ஒரு நிறுவனம் கடன் வழங்கும் நிறுவனமாக செயல்படுவதற்கான அனுமதியைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இனி பிளிப்கார்ட் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடன் வழங்கும் சேவையில் ஈடுபட முடியும். அடுத்த சில மாதங்களில் பிளிப்கார்ட் பைனான்ஸ் நிறுவனம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் . இதற்காக ஊழியர்களை பணி நியமனம் செய்யும் வேலைகளில் பிளிப்கார்ட் இறங்கி இருக்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பைனான்ஸ் பிரிவு பெங்களூருவின் கோரமங்களாவில் தலைமை அலுவலகத்தை அமைத்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிளிப்கார்ட் செயலி வாயிலாகவே வாடிக்கையாளர்கள் எளிதாக கடன் பெறும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
தற்போதைக்கு பிளிப்கார்ட் ன் Super.Money என்ற தளம் மூலம் ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டமைத்து வாடிக்கையாளர்களுக்கு பர்சனல் லோன்களை வழங்கி வருகிறது. இனி பிளிப்கார்ட் நிறுவனமே நேரடியாக கடன்களை வழங்கப் போகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சாதகமான அம்சம் ஏற்கனவே அந்த நிறுவனம் இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் தரவுகளை கொண்டிருக்கிறது. எனவே இந்திய மக்களின் நுகர்வு போக்கு ,கடன் வாங்கும் தன்மை குறித்த தரவுகள் அதனிடம் இருப்பதால் அதனை அடிப்படையாகக் கொண்டு முதல் கட்டமாக குறைந்த தொகையில் கடன் வழங்கும் சேவைகளை தொடங்க இருக்கிறதாம். இதனை அடுத்து அதனை பல்வேறு பிரிவுகளுக்கு கடன் வழங்கும் நிறுவனமாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இனி இந்த நிறுவனமே நேரடி கடன், ஈஎம்ஐ வசதிகளை ஏற்படுத்தி தரும்.
பிளிப்கார்ட் நிறுவனத்தை பொருத்தவரை 36 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக இருக்கிறது. கடந்த ஆண்டில் தான் கூகுள் நிறுவனம் இதில் 350 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இந்த நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிட இருப்பதால் தன்னுடைய தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு இருக்கிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications