வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட் நிறுவனம், கூகுளின் முன்னாள் உயர் அதிகாரி பாலாஜி தியாகராஜனை தனது புதிய தலைமை தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு அதிகாரியாக நியமித்துள்ளது. ஃபிளிப்கார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தியாகராஜன் இதற்கு முன்னர் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஊபர், யாஹூ உள்ளிட்ட பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர். அமெரிக்காவில், Kasu.ai நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். இந்த நிறுவனம், வணிக செயல்முறைகளை மேம்படுத்தவும் தானியங்குப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு உத்திகளை உருவாக்கியது.

முன்னதாக ஃபிளிப்கார்ட்டில் தலைமை தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு அதிகாரியாக இருந்த ஜெயந்திரன் வேணுகோபால் ரிலையன்ஸ் ரீடெயிலில் இணைந்ததைத் தொடர்ந்து, பாலாஜி தியாகராஜன் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். ஃபிளிப்கார்ட் தனது தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்தி வரும் வேளையில், இந்தப் புதிய நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "பாலாஜியின் செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவம் சமகாலத்தில் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் செயற்கை நுண்ணறிவை விரைவாகப் பயன்படுத்தவும், அதிநவீன AI பயன்பாடுகளை இயக்க நம் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்தவும், பெரிய அளவில் புதுமைகளை கொண்டு வர அவர் முக்கிய கவனம் செலுத்துவார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலாஜி தியாகராஜன் புனே பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலைப் பட்டமும், சிராக்கூஸ் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் நிதி மற்றும் செயல்பாடுகள் பிரிவில் MBA பட்டமும் பெற்றுள்ளார்.
25 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவத்தைக் கொண்ட தியாகராஜன், கடந்த இரண்டு தசாப்தங்களில் கிளவுட் மற்றும் மொபைல் தொழில்நுட்பங்களின் எழுச்சி, பிக் டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய தொழில்நுட்பப் புரட்சிகளில் அனுபவம் பெற்றவர் .
இந்த புதிய நியமனத்தின் மூலம், ரமேஷ் குருராஜா, சந்தியா கபூர், பரத் சினமன்டூர், அமித் சச்சன் மற்றும் கௌரவ் மாதூர் உள்ளிட்ட ஃபிளிப்கார்ட்டின் முக்கிய தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் தியாகராஜனுக்கு நேரடியாகப் பொறுப்பளிப்பார்கள். மேலும், ஃபிளிப்கார்ட்டின் SVP ஆக இருந்த பரத் ரெட்டி வால்மார்ட்டுக்கு மாற இருப்பதால், அவரது பொறுப்புகளையும் தியாகராஜன் ஏற்றுக் கொள்வார் என்று சொல்லப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications