பிளிப்கார்ட் நிறுவனம் 2021-22 ஆம் நிதியாண்டில் மட்டும் 7800 கோடி ரூபாய்க்கும் அதிக அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 46 சதவீதம் அதிகமாகும்.
இந்த நஷ்ட அளவீடு வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளிப்கார்ட் குழுமத்தின் B2B பிரிவான பிளிப்கார்ட் இந்தியா மற்றும் B2C பிரிவான பிளிப்கார்ட் இண்டர்நெட் பரிவுகளின் நஷ்ட அளவீடாகும்.
கடந்த நிதியாண்டின் பிளிப்கார்ட் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் இண்டர்நெட் நிறுவனங்கள் 5,352 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவாக விளங்கும் B2B பிரிவான பிளிப்கார்ட் இண்டர்நெட் நிறுவனம் மட்டும் கடந்த ஆண்டு 2,907 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்த நிலையில், 2021-22 ஆம் நிதியாண்டில் 4,399 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
பிளிப்கார்ட் இண்டர்நெட்
பிளிப்கார்ட் இண்டர்நெட் நிறுவனத்தின் கீழ் மைந்திரா, இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து நிறுவனங்களின் லாப மற்றும் நஷ்ட அளவீடுகளும் அடக்கம். மேலும் பிளிப்கார்ட் குழுமத்தின் B2B பிரிவான பிளிப்கார்ட் இந்தியா முன்பு வால்மார்ட் இந்தியாவாக இருந்தது.
பிளிப்காரட் இந்தியா
பிளிப்காரட் இந்தியா கடந்த நிதியாண்டில் 2445.6 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில் 2021-22 ஆம் நிதியாண்டில் 3413 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
7800 கோடி ரூபாய் நஷ்டம்
ஆனால் பிளிப்கார்ட் -இன் நிகர வருமானம் 2021-22 ஆம் ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துச் சுமார் 61,836 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் Flipkart இந்தியா 51,176 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்று அதிகப்படியான பங்களிப்பை அளித்துள்ளது. இதேபோல் பிளிப்கார்ட் இண்டர்நெட் 10,660 கோடி ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது.
வருவாய்
2020-21 ஆம் ஆண்டில் பிளிப்கார்ட் குழுமத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.51,465 கோடியாக இருந்தது, பிளிப்கார்ட் இந்தியா 43,349 கோடி ரூபாய் மற்றும் பிளிப்கார்ட் இண்டர்நெட் 8,116 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்று இருந்தது.
பண்டிகைக் கால விற்பனை
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Redseer இன் கூற்றுப்படி, இந்தியாவில் பண்டிகைக் காலத்தில் மொத்த விற்பனையில் அமேசான், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களை ஓரம்கட்டி பிளிப்கார்ட் முன்னணியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
62 சதவீத வர்த்தகம்
செப்டம்பர் கடைசி வாரத்தில் நடைபெற்ற பண்டிகைக் கால விற்பனை-யின் மொத்த அளவீட்டில் பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் சுமார் 62 சதவீதம் அல்லது ரூ.24,800 கோடி மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 40,000 கோடி ஆக இருந்த நிலையில் பிளிப்கார்ட் போட்டியை சமாளித்து முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட்
ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், இந்தியாவில் மூன்றாம் தரப்பு வணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் நேரடி-நுகர்வோர் பிராண்டுகளுக்கு அதன் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க்கை பயன்படுத்திப் புதிய சேவையாக அளிக்க உள்ளது. இதேபோல் பிளிப்கார்ட்-ம் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க்கை 3ஆம் தரப்புச் சேவையாக அளிக்க உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications