Flipkart இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் மற்றும் அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்கள் தான் இன்று இந்திய ஸ்டார்ட்அப் துறையில் ஆட்சி செய்து வருகின்றனர் என்றால் மிகையில்லை,
பிளிப்கார்ட் நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் மற்றும் இந்நிறுவனத்தை ஆரம்பக்கட்டத்தில் பணியாற்றியர்கள் தற்போது இந்நிறுவனத்தை விட்டு வெளியேறி தற்போதும் 50க்கும் அதிகமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கி இந்திய ஸ்டார்ட்அப் துறையின் சூப்பர்ஸ்டார் ஆக விளங்குகின்றனர்.

இதனால் பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு வெளியேறிய பின்பு நிறுவனத்தை துவங்கிய கூட்டத்தை (தொழில்நுட்ப வல்லுநர்கள்)"பிளிப்கார்ட் மாஃபியா" என்று அழைக்கப்படுகிறார்கள். மாஃபியா என்ற உடன் இவர்கள் தவறான செயல்படுகின்றனர் என்பது இல்லை, ஒரு நிறுவனம் அல்லது அமைப்பில் இருந்து பல துறையில் ஆதிக்கம் செய்யும் கட்டமைப்பை தான் மாஃபியா என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் பிளிப்கார்ட் மாஃபியா என்றால் அமெரிக்காவில் Paypal Mafia. இதில் இருந்து வந்தவர் தான் எலான் மஸ்க், Peter Thiel என 15க்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இந்த கூட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்ட நிறுவனத்தை பார்த்தால் ஆடிப்போயிருவீங்க,டெஸ்லா, லின்கிடுஇன், Palantir Technologies, ஸ்பேஸ்எக்ஸ், Affirm, Slide, Kiva, யூடியூப், Yelp, Yammer இப்படி அடிக்கொண்டே போகலாம்.
Flipkart Mafia-வின் துவங்கம் சச்சின் பன்சால், பின்னி பன்சால், சந்தீப் சோணி, முகேஷ் பன்சால், அங்கித் நகோரி, கரண் பாட்டியா, நிதின் குப்தா, அங்கித் நகோரி ஆகியோரில் துவங்கி ஆலமரம் போல் விரிகிறது. Flipkart Mafia-வில் இருப்போர் பெரும்பாலனவர்கள் ஐஐடி மாணவர்கள், அதிலும் குறிப்பாக IIT டெல்லி கல்லூரி மாணவர்கள். Flipkart 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, அன்று முதல் இன்று வரையில் விற்பனையில் டாப்.
Flipkart-ஐத் தொடங்குவதற்கு முன், சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் Amazon-இல் பணியாற்றினர். ஈகாமர்ஸ் வர்த்தகம் குறித்து 360 டிகிரியும் அறிந்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து Flipkart-ஐத் தொடங்கினர். 2005-07 காலக்கட்டத்தில் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் என்பது புதியது மட்டும் அல்லாமல் மிகவும் சிறியது ஆனாலும் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் நம்பிக்கை உடன் Flipkart-ஐத் தொடங்கினர்.
Flipkart-ஐத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், பல சவால்களை எதிர்கொண்டனர் குறிப்பாக ஆன்லைன் கட்டணம், சப்ளை செயின் பிரச்சனை, வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவை பெரும் சவால்களாக இருந்தது. ஆரம்பக்கட்டத்தில் பிளிப்கார்ட் தளத்தில் புத்தகங்கள் தான் விற்கப்பட்டது, இதை சச்சின் பன்சால்-ஏ நேரடியாக கொண்டுபோய் டெலிவரி செய்யும் காலமும் இருந்தது. இப்படி சிறிய அளவில் துவங்கி Flipkart-ஐ இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உருவாக்கினர்.
பிளிப்கார்ட் வெற்றிக்கு பின்னால் பல திறமையான இன்ஜினியர்களின் பங்கீடு உள்ளது, இவர்களை தேடி தேடி இணைத்த பங்கு நித்தின் சேத்-க்கு தான் உள்ளது. பிளிப்கார்ட்டின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியாக இருந்தவர், ஆரம்பக்கட்டத்தில் இவர் தான் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு பணியை கவனித்து வந்தார்.

தற்போது இந்த ஊழியர்கள் தான் பிளிப்கார்ட் மாஃபியா ஆக மாறியுள்ளனர், இந்நிறுவனத்தின் 70 ஊழியர்கள் சுமார் 50 வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். இதில் சில Udaan, Navi Technologies, PhonePe, Groww, Vogo, Cure.fit, Suki, Exotel, Arzooo, Hansel, Parrhai, Homefuly, xto10x Technologies.


Click it and Unblock the Notifications