இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், வால்மார்ட் என்னும் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இயங்கினாலும் செலவுகளைக் குறைப்பதை முக்கியத் திட்டமாகக் கையில் எடுத்துள்ளது. இதன் வாயிலாகப் பிளிப்கார்ட் ஊழியர்கள் உச்சபட்ச பீதியில் உள்ளனர்.
இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி பணிநீக்க சீசன் இன்னும் முடியவில்லை என்றே சொல்ல வேண்டும், ஒருபக்கம் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை எனப் பல விஷயங்கள் பாதித்து வரும் வேளையில் மக்கள் பார்த்து பார்த்து செலவு செய்யும் நிலைக்கு வந்துள்ளனர்.

இதனால் ரீடைல் சந்தையில் பல பிரிவுகளின் வர்த்தகம் கடுமையாகப் பாதித்துள்ளது, இதன் தாக்கத்தை இந்தியாவில் உள்ள பல டிஜிட்டல் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் எதிர்கொள்ளத் துவங்கியுள்ளது. இதேபோல் ஸ்டார்ட்அப் துறையில் இருக்கும் Funding Winter பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.
மேலும் ஏஐ பயன்பாடும் தற்போது அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் செலவுகளைக் குறைக்கும் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதால் பல வேலைகள் தற்போது அதிகப்படியாக ஆட்டோமேட் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே தற்போதைய பணிநீக்க அறிவிப்புக்கு அடிப்படை காரணம், இதைத் தாண்டி நிறுவனத்தின் செயல்பாடுகளும் முக்கியக் காரணமாக இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் பிளிப்கார்ட் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 5-7 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தப் பணிநீக்க பணிகள் மார்ச் - ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது, மேலும் இந்தப் பணிநீக்கத்தை நடப்பு ஆண்டின் பர்பாமென்ஸ் ரிவ்யூவ் வாயிலாக நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட் கடந்த 2 வருடங்களாக வேலைவாய்ப்புக் குறைப்பை வருடாந்திர பர்பாமென்ஸ் ரிவ்யூவ்-ன் ஒரு பகுதியாக நடத்தி வருகிறது. இதன் வாயிலாகவே கடந்த ஆண்டுப் புதிதாகப் பணியில் சேர்க்கப்படுவதைப் பிளிப்கார்ட் நிறுத்தி பெரிய அளவில் பணத்தை மிச்சப்படுத்தியது. இந்த வருட பர்பாமென்ஸ் ரிவ்யூவ் பணிகளுக்குப் பின்பு சுமார் 5-7 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது.
தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான நிதி ஆதாரத்தைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இது வெற்றி அடையும் பட்சத்தில் பணிநீக்கத்தின் அளவு கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 22000 ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில், இந்தப் பணிநீக்கம் மூலம் குறைந்தது 1500 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம். பிளிப்கார்ட் பணிநீக்கம் செய்தால் மற்ற ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தக நிறுவனங்களும் பணிநீக்கம் செய்யத் துவங்கும் என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications