முன்னணி ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் நிறுவனம், அதன் பிரம்மாண்ட பொது பங்கு வெளியீட்டினை 2021க்குள் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வெளியான செய்தியில், இந்த ஆண்டின் இறுதிக்குள் பிளிப்கார்ட் நிறுவனம் பங்கு வெளியீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் 50 பில்லியன் டாலர் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது அதன் போட்டியாளர்களான அமேசான், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிட உதவும்.
பங்கு வெளியீடு எங்கு?
பிளிப்கார்டின் இந்த திட்டம் நிறைவடைந்தால், வால்மார்ட்டும் அதன் முதலீட்டினை இருமடங்காக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் அதன் பங்கு வெளியீட்டிற்கான சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவினை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பிளிப்கார்ட் சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வால்மார்ட்
ஆனால் அதன் பெற்றோர் நிறுவனமான வால்மார்ட் அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. பிளிப்கார்ட் அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டால், இது பெரும் நிதியினை திரட்டலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியாகவில்லை.
விரைவில் வெளியாகலாம்
எனினும் இது குறித்தான நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள் நடந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதனை விரைவில் செயல்படுத்த இந்த நிறுவனம் ஆலோசகர்களை நிறுவியுள்ளதாகவும் தெரிகிறது. இன்னும் சில தகவல்கள் இது குறித்தான அனுமதிக்காக பங்கு சந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பொது பங்கு வெளியீடு
ஆக மொத்தத்தில் இந்த 2021ம் ஆண்டு இறுதிக்குள் இந்த பொது பங்கு வெளியீடு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றாலும் 2022ம் ஆண்டின் இறுதியிலும் இந்த பங்கு வெளியீடு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்த நெருக்கடியான நேரத்தில் கொஞ்சம் இது போன்ற திட்டங்கள் கொஞ்சம் தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விகிதம்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் சுமார் 77 சதவீதம் பங்குகளை வால்மார்ட் நிறுவனம், 16 பில்லியன் டாலருக்கு கடந்த 2018ல் கைபற்றியுள்ளது. இந்த முதலீடு இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை அன்னிய நேரடி முதலீடாகும்.
இந்தியாவின் முன்னணியில் உள்ள வெற்றிகரமான ஸ்டார்டப் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்டின் நிறுவனர்கள், சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆவர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications